பக்கம்:நினைவுச்சரம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

காலவேகம் எவ்வளவோ மாறுதல்களே நிகழ்த்துகிறது. மனித வாழ்க்கையில், குடும்பங்களில், ஊர்களில், நாடு நெடுகிலுமே மாறுதல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக் கின்றன.

ஒவ்வொருவருடைய சூழ்நிலையிலும் தினம் தினம் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்கின்றன.

நகரங்களில் மாற்றங்கள் பளிச்செனப் புலனுகக்கூடிய விதத்தில் அமைகின்றன. வேகமாகவும் நடைபெறு: கின்றன.

கிராமங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் சில வேகமாக ஏற்பட்டிருக்கலாம். பல மெது மெதுவாக நிகழ்கின்றன.

காலவெள்ளத்தாலும் அசைக்கமுடியாத கற்பாறைகள் போல, அன்று கண்ட மேனி அழியாது', இன்றும் சில மாறுதல்களால் பாதிக்கப்படாது சில சில ஊர்கள் காணப்படு வதும் இயல்பு.

புறத்தில் பலப்பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டபோதிலும், மனிதர் வாழ்க்கையில் எண்ணற்ற மாறுதல்கள் சேர்ந்திருப் பினும், அகத்தில்-உளப் பண்புகளிலும் உணர்ச்சிகளிலும்ஆழமான, நிலேயான, மாற்றங்களை மனிதர்கள் பெற்றுள் ளனரா ?

சிந்தனைக்கு உரிய விஷயம் இது. பொதுவாக, முப்பது வருடங்கள் ஒரு தலைமுறைக்காலம்

என்று கருதப்படுகிறது. தலைமுறைக்குத் தலைமுறை மனித வாழ்க்கையில், உறவுகளில், எத்தனையோ மாற்றங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/6&oldid=589245" இலிருந்து மீள்விக்கப்பட்டது