பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நினைவு அலைகள் 'ஆதி பல்லவன் காலத்தில் நீங்கதானே, வரதராசர் பெருமாள் கருவறையில் தீவட்டி பிடித்தவர்கள். ஆண்டவன் ஏனோ இப்படிச் சோதிக்கிறான். இன்னக்கி நிலை தாழ்ந்து போச்சி என்பதால், கண்டவனோடு சேர்ந்து, இருக்கிற மரியாதையையும் கெடுத்துக் கொள்ளலாமா? “என்னமோ துரைசாமி! நான் ஒளிக்காமல் சொல்லிவிட்டேன் நீயே மெல்ல யோசித்துப்பார். 'எதுவும் தானே வந்து தொலையும்போது வந்து தொலையட்டும். நாமா வரவழைத்துக் கொள்ள வேண்டாம்? H 'வழக்கம்போல ஆதிதிராவிடர்கள் ஊருக்குப் பின்புறம் ஆற்றோரமே போகட்டும். என்ன பல்லக்கிலா போகிறான்கள், ஒத்தடிப்பாதை போதாது என்பதற்கு? "மற்றது எப்படிப் போனாலும் நம் தெரு வழியாகப் போக விட்டால் கள்ளுக்கடையிலிருந்து போகும்போது ஆற்றோரம் போடுகிற அசிங்கமான வாய்ச்சண்டை, கைச்சண்டை எல்லாம் நம் வீட்டு முன்பே வந்து விடும். 'இருக்கிறது இருக்கிறபடியே இருக்கட்டும். நாம் கண்மூடின பிறகு, எப்படியோபோகட்டும். அது ஆண்டவன்விட்டவழி, அது நம் கையில் இல்லை. 'என்ன ஊமையாக இருக்கிறாயே துரைசாமி? நான் சொல்வதை ஒப்புக் கொள்கிறாய் அப்படித்தானே!' என்றார் ஒரு பழமைப் பாதுகாவலர். மழை வரும் பின்னே மின்னல் வரும் முன்னே! 'பெரியவர்கள் மனம் புண்படும் மாதிரியில் குறுக்குச் சால் ஒட்ட வேண்டாம் என்று நினைத்தேன். அதனால் சும்மா இருந்தேன். எனக்கு என்னவோ, திருவிதாங்கூர் அரசர் செய்ததே சரி என்று தோன்றுகிறது. 'நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். 'பொறுப்பு, கவலை, சுமை ஏதும் இல்லாமல் துள்ளித் திரியும் பிள்ளைப் பருவம் என்றும் இருந்தால், நன்றாக இருக்கும் என்று நான் எண்ணுவது உண்டு. உங்களுக்கு எப்படியோ? 'எல்லாரும் அப்படியே விரும்பினாலும் அதற்காக எத்தனை வேண்டுதல்கள் செய்து கொண்டாலும் அது பலிக்குமா? பாருங்களேன்! எத்தனையோ யுகத்துக்கு ஒரே ஒரு மார்க்கண்டேயன் மட்டுமே என்றும் பதினாறாக இருந்தான்' என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். எவ்வளவு காலமோ கழிந்தும் இரண்டாவது மார்க்கண்டேயன் வரவில்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/146&oldid=786898" இலிருந்து மீள்விக்கப்பட்டது