பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 நினைவு அலைகள் அன்று பல நகரங்களில் ஒடும் படமும் இல்லை; பேசும் படமுமில்லை. அவற்றின்மேல் வெறியேற்படும் சூழ்நிலையும் இல்லை. அன்று அரசியல் இயக்கங்கள் இருந்தன. இந்திய விடுதலைப் போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிற்று. நீதிக் கட்சி படிக்கத்துண்டிற்று. ஊரார் வீட்டுப் பிள்ளையை விட்டு ஆழம் பார்த்த பெரியவர்களைக் காண்டல் அரிது. ஆங்கில ஆட்சியின் கல்வி நிலையங்களுக்குப் போக வேண்டாம் என்று, காந்தியடிகள் அறிவுரை பகர்ந்தது உண்மை. ஆயினும் ஏதோ சாக்குகளைக் காட்டி, கல்வி நிலையங்களை மூடவைக்கும் அடாவடி அரசியல் அன்று இல்லை. அநேகமாக விதை நெல்களாகிய மாணவர்கள், மாணவர் களாகவே இயங்கினார்கள். குடும்பங்களின் மகத்தான பொறுப்பு கற்க வேண்டிய கலைகள் பல, அத்தனையும் கற்றுக்கொடுப்பதற்குக் கல்வி நிலையங்கள் முயல்வதைவிடக் குடும்பங்கள் அவைகளில் சிலவற்றுக்குப் பொறுப்பேற்றல், நம்முடைய சூழ்நிலைக்கு, மிகவும் நல்லது. எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும். என் இளமைப்பருவத்தில் எந்தக் கல்வி நிலையத்திலும் இதற்கான ஏற்பாடு இல்லை. ஆனால் என்ன? வீட்டில் கற்றுக் கொடுத்தார்கள். என்னிலும் மூத்த என் மாமா, ஏற்கெனவே, நீச்சல் கற்றிருந்தார்: மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் அளவு திறமை பெற்றிருந்தார். எனக்கு நீச்சல் கற்றுத்தரும் பொறுப்பை, என் தந்தை அவரிடம் ஒப்படைத்தார். அவரும் இரண்டொரு பண்ணையாள்களும் இருந்து எனக்கு, கிணற்றில் நீச்சலடிக்கக் கற்றுக் கொடுத்தார்கள். எங்கள் தோப்பிலுள்ள இறவைக் கிணற்றிற்குப் படிக்கட்டுகள் உண்டு. எங்கள் ஆட்கள், முதலில் இறங்கி, தண்ணிரில் மிதந்தார்கள், அடுத்து என் மாமா, தண்ணிர் தொடும் படிவரை இறங்கி நின்றுகொண்டார். பிறகு என்னை இறங்கச் சொன்னார். எப்படியோ மெல்ல இறங்கினேன். சற்று நடுக்கமே. மாமா நின்று கொண்டிருந்த படிக்கட்டிற்குச் சென்றதும் என் இடுப்பில் உறுதியான நீண்ட வேட்டியைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். சட்டென்று நீரில் தள்ளிவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/184&oldid=786974" இலிருந்து மீள்விக்கப்பட்டது