பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 171 முழங்கிற்று. காற்றில் குளுமை இருந்தது. கவர்ச்சியான காட்சியைக் கண்டேன். இவ்வளவு பெரிய கடலுக்குப் பக்கத்தில் இருக்கலாமா, இப்படியொரு அச்சம். இரண்டு மணி நேரத்திற்கு மேல், கல்லூரிக்குள் நடையாக நடந்தோம். யாரும் கல்லூரி முதல்வரைப் பேட்டி காணவில்லை. அவரைக் காண முடியுமா முடியாதா என்று எவருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. மற்றவர்கள் மதிப்பு எண்களைக் கேட்டறிவதில் மட்டும் குறைவில்லை. ஏதோ, தாங்களே சேர்க்கைக்குப் பொறுப்புபோல் ஒவ்வொருவரும் மற்றவர்கள் மதிப்பெண்களைக் கண்டு பிடித்துக் கொண்டார்கள். சிலவேளை, 'இந்த மதிப்பெண்ணுக்கு எப்படிங்க இடம் கிடைக்கும். இப்ப நாலு சாதிக்கும் பிரித்துக் கொடுக்கப் போகிறார்களாம். 'இவ்வளவு குறைந்த எண்களுக்கு யாரையாவது பிடித்து நெருக்கினால் ஒருகால் பலிக்கலாம் என்று வெளியார் மதிப்பிட்டுக் கொண்டிருந்ததும் என் காதில் வீழ்ந்தது. என் மதிப்பெண்களைப் பார்த்து, யாரும் அப்படிச்சொல்லவில்லை. கிடைக்குமென்று எனக்கு நம்பிக்கை யூட்டியவர்களும் இல்லை. இரண்டுங் கெட்டானாக இரண்டு மணிகள் காத்திருந்தோம். அதற்கு மேல் பயனில்லை என்று முடிவுசெய்து கொண்டோம். நம்பிக்கையும் பாராட்டும் வெளியேற முயன்றபோது, தலைப்பாகையோடு கூடிய ஒருவர், புன்னகையோடு ஒர் அறையில் இருந்து வேகமாக வெளியே வந்தார். திரு. அருணகிரிநாதரும் அவரைப் போன்ற வெள்ளைத் தலைப்பாகை அணிந்திருந்தார். ஒரே தலைப்பாகைக் கவர்ச்சியோ என்னவோ? பண்டிதர் அவரிடம் விரைந்தார். என்னுடைய மதிப்பெண்களைக் காட்டினார். இடம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டா என்று கேட்டார். புதியவர், அக்கல்லூரி ஆசிரியர் என்று தம்மை முதலில் அறிமுகப்படுத்திக் கொண்டார். 'இவருக்கு இடம் கிடைப்பது உறுதி முதல் பட்டியலில் தவறிவிட்டாலும் இரண்டாம் பட்டியலில் நிச்சயம் கிடைத்து விடும். அமைதியாக வீட்டுக்குப் போங்கள். 'பத்து நாளைக்குள் நல்ல முடிவு தெரியவில்லையென்றால் என்னை வந்து பாருங்கள். என் பெயர் கேதாரி ராவ் என்று செ'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/213&oldid=787006" இலிருந்து மீள்விக்கப்பட்டது