பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 நினைவு அலைகள்,

  • ==

நமக்குத் தேவையான தொழில்களில் முதலீடு செய்ய, பிற நாட்டு, பெரும் நிறுவனங்களுக்கு உரிமை தந்தால் என்ன என்று நம்மை நா.ே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. அப்படி ஏமாறத் தொடங்கினால், வெளிநாட்டு ஆதிக்கமே நம் இந்தியாவில் செலாவணியாகும். இந்தியத் தன்னாட்சி உரிமை என்பது கானல் நீராகிவிடும். இப்பாடத்தையே முந்தைய வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. ஆட்சி உரிமையைப் பறித்த ஆங்கிலேயர் அதோடு நிற்கவில்லை, ஆதாயம் தேடியல்லவா நீண்ட நெடுந்துாரம் வந்தார்கள்? எனவே, இந்தியத் தொழில்களைத் திட்டமிட்டு நலிய வைத்தார்கள்; தங்கள் தொழில்களை வளர்த்தார்கள். பெரும் வாணிகத்தைப் பிடித்துக் கொண்டார்கள். அதற்கு மேலும் ஊடுருவினார்கள். எதுவரையில், தொடக்கப்பள்ளிகளுக்கான தமிழ்ப் பாட நூல்களைக் கூட ஒர் ஆங்கிலேயரே எழுதி வெளியிட்டு, பொருள் திரட்டிக்கொண்டிருந்தார். அதற்குக் கூடத் தமிழ்ப் புலவர்களுக்கு இடமில்லை. அவ்வளவிற்கு அழுத்தி வைத்திருந்தார்கள், ஆங்கிலேயர்கள். ஆங்கிலேயரிடம் இருந்து தமிழ்ப்பாடநூலுக்கு விடுதலை ஆங்கிலேயர் கையிலிருந்த தமிழ்ப் பாட நூல் கோட்டையை முதன் முதல்துணிந்து தாக்க முனைந்தவர், நல்லாசிரியர் நமச்சிவாயர் ஆவார். தொடக்கப் பள்ளிகளுக்கான தமிழ்ப் பாடநூல்களை எழுதினார். கல்வி இயலின் அடிப்படையில் எழுதினார். கற்பிக்க வேண்டிய சொற்களை முறைப்படுத்த வேண்டும். அந்த முறை என்ன? எளியன; எளிமை அல்லாதன; சற்றுக் கடினமானவை: கடினமானவை: அரியவை. இப்படிச் சொல் தொகுப்பை முறைப்படுத்திக் கொண்டு, எளிய சொற்களோடு தொடங்கி, அரிய சொற்கள் வரை, பாடங்கள் மெல்ல மெல்ல நகர்ந்து நகர்ந்து வளர வேண்டும். வயதிற்கேற்ற கதைகளும் கருத்துகளும் பாடங்களும் படங்களும் இடம்பெற வேண்டும். கல்வி இயலின் அடிப்படை இவை. இவற்றை மனத்தில் கொண்டு, நன்முறையில் பாடநூல்களை எழுதினார். பின்னர், மேல் வகுப்புகளுக்கும் நூல்கள் எழுதினார். காலநீட்டத்தில் கல்லூரி நூல்கள் எழுதி வெற்றி பெற்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/230&oldid=787025" இலிருந்து மீள்விக்கப்பட்டது