பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 197 சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு' என்கிறது திருக்குறள். தடுக்கவும் கூடாது; எங்கெங்கெல்லாமோ ஒடும்படி விட்டுவிடவும் கூடாது. பின் என்னதான் செய்வது? நல்லாறு படுத்த வேண்டும். சிந்தனை ஒட்டத்தை மெல்ல, நயமாகத் திருப்ப வேண்டும். திருக்குறள் கூறும் இந்நல்லுரையை நல்லாசிரியர் நமச்சிவாயர் கற்றார். அதற்குத்தக நின்றார். நல்லாசிரியரின் பணி உயிரற்ற மண்ணை விருப்பம்போல் பிசைந்து, அதைக் கொண்டு, வேண்டிய அளவில், விரும்பிய வடிவில் கல்லறுப்பது அல்ல ஆசிரியரின் பணி; ஆளாக்குவது அவருடைய பணி. உயிருள்ள மனிதக் குழந்தையை, சிறுவனை, சிறுமியை இளைஞனை, கன்னியைச் சிறப்புள்ள ஆணாகப் பெண்ணாக உருவாக்குவது ஆசிரியர்களின் தலையாய கடமை. இதில் வெற்றிபெற, அறிவுபெறுதல் மட்டும் போதாது, தன்னேரில்லாத புலமை பெறுதல் மட்டும் போதாது; தொழில்நுட்பம் அறிதல் மட்டும் வெற்றியைத் தராது. விழிப்பாக, மெய்யாக உழைப்பதும் வெற்றி மேடையில் நிறுத்தாது. அவரவர் பண்பறிந்து ஆளாக்க வேண்டும். அச்சம் கொள்ளாமல், ஆத்திரப்படாமல், மென்மையைக் கையாள வேண்டியவரிடம் கையாள வேண்டிய வேளையில் மென்மையைக் கையாளவும், உறுதியைக் கையாள வேண்டிய சில போது சிலரிடம் உறுதியைக் காட்டவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆசிரியரின் வெற்றிக்கு இதுவே பெருங்காரணம். இதைச் சொல்லிக்கொடுக்க அமைப்புகளோ முறைகளோ உருவாகாத காலத்து ஆசிரியர்களில் பலரும் தாமே முயன்று ஆளாக்கும் நுட்பங்களைக் கற்றுக்கொண்டிருந்தார்கள், கையாண்டார்கள்: வெற்றியும் பெற்றார்கள். கல்லூரி மாணவர்களின் துடிப்பான போக்கும் தீவிரமான கருத்துகளும் நியூட்ரான் குண்டுகள் அல்ல; பீரங்கிவெடிகள் அல்ல; சற்றே சுடும் சட்டிகள். அவ்வளவே! அவற்றைத் தாங்க முடியாது, சட்டி சுட்டதடாகையும் விட்டத-ா' என்று சட்டென்று கீழே போட்டுவிட்டால் எதிர்கால சாதனையாளர்களில் பலர், காலத்திற்கு முந்திச் சுக்குநூறாக உ-ைசிசி போய்விடுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/239&oldid=787035" இலிருந்து மீள்விக்கப்பட்டது