பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 நினைவு அலைகள் பரப்பிய துணிச்சல் மிகப் பெரிது. கொள்கையைப் பரப்பியது மட்டுமன்று; சொன்னபடி செய்து காட்டியவர்களை வளர்த்த பெருமை வனமலர்ச் சங்கத்துக்குரியதாகும். சு. கோதாண்டராமன் - ருக்குமணிதேவி, பி.வி. தாஸ் - ஜானகி, சி. சுப்பிரமணியம் - சகுந்தலா, அழகிரிசாமி - அம்சா, நெ.து. சுந்தர வடிவேலு காந்தம்மாள் ஆகிய தம்பதிகள் வனமலர்ச் சங்கத் தொண்டின் பயன். அவர்கள் தொடங்கிய சாதிக் கலப்பு அடுத்த தலைமுறையிலும் தொடர்வது பற்றிக் கொள்ளை மகிழ்ச்சி. கருத்துக்கு மட்டுமல்லாது செயலுக்குமே, தமிழ்நாட்டின் சமுதாய மாற்றத்திற்குப் பாடுபட்ட இயக்கங்களையும் எடுத்த முயற்சிகளையும் ஆய்வோர், வனமலர்ச் சங்கப் பணியினைக் கணக்கிலெடுக்கும் போதுதான் ஆய்வு முழுமை பெறும். இந்திய மொழிகளிலே தமிழில்தான் முதன் முதலாகக் கலைக்களஞ்சியம் வெளிவந்தது. அதைத் தொடக்க, காலம் முதல் தொண்டாற்றி வெற்றிகரமாக நிறைவேற்றிய சாதனையாளர் பெரியசாமித்துரன் ஆவார். அதுபோக, பல்துறை தமிழிலக்கியங்களை உருவாக்கி 'பத்மபூஷன் பெற்ற பெருமைக்குரியவர், அவர். அவரைப் பயிற்றுவித்த களம் வனமலர்ச் சங்க வெளியீடான பித்தன்' இதழ் என்பது பெருமைக்குரியது. விளையும் பயிர் முளையிலே அதே போன்று, வனமலர்ச் சங்கத்தின் கண்டிப்பான கணக்கு ஆய்வராய் விளங்கிய திரு. சி. சுப்பிரமணியம் பிற்காலத்தில் சென்னை மாகாண நிதி அமைச்சராகவும், இந்திய நாட்டின் நிதி அமைச்சராகவும் உயர்ந்து அரும் பணியாற்றினார். பொதுப் பொறுப்பின் பால பாடத்தைக் கற்றுத் தந்த வனமலர்ச் சங்கம் அதனால் பெருமை பெறுகிறது. 28. பித்தன் உதயம் வனமலர்ச் சங்கத் தொண்டிற்கென்று திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்கினார்கள். முதலில் சைக்லோஸ்டைல்’ இதழாக வெளிவந்தது. சில திங்களுக்குப் பின்னர் அச்சு இதழாக வெளிவரத் தொடங்கிற்று. எப்போது வெளிவந்தது? சங்கம் தொடங்கிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1928 (டிசம்பர்) கார்த்திகைத் திங்களில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/270&oldid=787074" இலிருந்து மீள்விக்கப்பட்டது