பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 24.1 'அப்படியிருக்க, இச்சிறு களங்கமற்ற இளங்கொடிகளை, சமுதாயக் கட்டுப்பாட்டில், வாட்டிக் கொல்லுதலும் தருமமோ? என்னே உயரிய இந்து மதத்திலுள்ள சில பெற்றோர்களின் அநியாயம் என்று ஒர் அன்பர் எழுதியதைப் பித்தன் வெளியிட்டது. உள்ளம் உருக்கும் அக்கட்டுரையை முழுக்கப் படியுங்கள். உள்ளம் இருந்தால் உணர்ந்து, திருத்த முன் வாருங்கள். குழந்தை விதவைகள் 'பச்சைக் குழந்தைகள், குருவிகள் போல் கள்ளமின்றித் திரிந்து, பறந்து வரும் பறவைகள் மல்லிகை மலர் போல் சிரித்துக்களிப்பூட்டும் ஊற்றுகள். ஒர் உயிருக்கும் இன்னோர் உயிருக்கும் வித்தியாசமே தெரியாத கள்ளமில்லாத பிள்ளைகள். 'இவர்களுக்கு விளையாட்டே உலகம். குதித்துக் குதித்துச் செல்லும் சிட்டுக் குருவியைப் பார்த்துப் புன்னகை புரிவதே வேலை. இவர்களைப் பிடித்து இருத்திக் கல்யாணம் என்று வயதானவர்கள் செய்கிறார்களே! 'இது யாருக்காக? பெரியவர்கள் மன நாடகம் பார்த்துக் களிக்கவா? அல்லது இயற்கையின் ஒளியாகிய சின்னஞ்சிறுவர்களின் வாழ்க்கை நலத்தைக் கோரியா? ‘எப்படியோ, பலபேர் முன்னிலையில் கல்யாணம் என்ற ஒன்றை நடத்திவிடுகிறார்கள். குழந்தைகள் - காதலர்கள் - இருவருக்கும் இது கஷ்டமான விளையாட்டே ஒழிய வேறில்லை. 'இப்பொழுது, ஏதோ காரணத்தால் புருஷக் குழந்தை இறந்துவிட்டால், மனைவியாகிய மற்றொரு குழந்தை, பெண் குழந்தை விதவையாகிவிடுமாம். ஒன்றும் அறியாப் பெண்ணை, விதவையென்றும் சொல்லலாமா?" பித்தனின் இச்சிந்தனைப் போக்கு தொடர்ந்தது. கோரிக்கை யற்றுக் கிடக்கு தண்னே இங்கு வேரில் பழுத்த பலா என்று பாரதிதாசன், விதவைகளின் வேதனைப் பிழைப்பை அப்படியே படம் பிடித்துக் காட்டினார். 'காதல் சுரக்கும் நெஞ்சினிலே - கெட்ட கைம்மையைத் துர்க்காதீர்' என்று புரட்சிக் கட்டளை பிறப்பித்தார். இவை சில ஆண்டுகள் சுயமரியாதை இயக்க மேடைகளில் கம்பீரமாகப் பாடப்பட்டது உண்டு. எனினும் விதவைகளுக்கு மறுவாழ்வு என்பது தமிழ் நாட்டில் ஊமையன் கண்ட கனவாகவே இருக்கின்றது. குழந்தை மணங்களாவது நிறுத்தப்பட்டதா? இல்லையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/283&oldid=787089" இலிருந்து மீள்விக்கப்பட்டது