பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. பித்தனின் புதிய போக்கு பித்தனிடம் பித்துக் கொண்டார் இராஜாஜி 'பித்தனைப் பற்றி என் அபிப்பிராயம் என்ன? காரணம் சொல்ல முடியாது. அது வெளிவந்தது முதல் அதன் மேல் மோகங் கொண்டுவிட்டேன். இவ்வளவு மட்டுமே சொல்லலாம்.' இப்படிப், பித்தனிடம் பித்துக் கொண்டவர் எவர்? திரு சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார். ஏன் பித்துக் கொண்டார்? காரணம் அவருக்கே தெரியவில்லை. அதுதானே காதல்! புதிய போக்குகள்; புரட்சிச் சிந்தனைகள் மாணவர்களால் நடத்தப்பட்ட முதல் தமிழ் இதழ் என்பது மட்டுமல்ல அதன் சிறப்பு. இன்றைக்குக் கேட்டாலும் பலர் அதிர்ச்சியடையக்கூடிய பல முற்போக்குக் கருத்துகள், பித்தன்' வாயிலாக வெளிவந்தன. பித்தன் முதல் மலரின் ஆறாவது இதழ் சுக்கில ஆண்டு சித்திரைத் திங்களில் வெளியாயிற்று. அது புத்தாண்டு வாழ்த்துப் பாடலோடு தொடங்கிற்று. சது. சுப்பிரமணியம் பாடிய அப்பாடலின் பகுதியைப் படியுங்கள். 'சாதிச் சேற்றில் சமயத்தின் குப்பையில் சாத்திரக் கந்தற் கூளத்தில் பண்டிதர் நீதிப் பொய்யினில் வைதிகக் கூச்சலில் நீண்ட நாள்கள் கழித்தனம் வீணிலே' வள்ளலார் வரிகளோ என்று மயங்குகிறீர்களா; தொடர்ந்து படிப்போம். 'கண்ணிருட்சியும் வாயில் வறட்சியும் காதடைப்பும் கடுவெம்பசியினால் உண்ணிகழ்ந் தெம் மனிதர் வருந்திட உணர்விலாது பலதினம் போக்கினோம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/290&oldid=787104" இலிருந்து மீள்விக்கப்பட்டது