பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 நினைவு அலைகள் அந்த அரிமாவின் 'என் வாழ்க்கைக் காதை"யிலிருந்து ஒரு பகுதியைப் பித்தன் வெளியிட்டு, மாணவர்களிடம் நற்சாட்சியை உருவாக்கிற்று. 'நாம் இன்னும் வெகுநாள்வரை சுதந்திரத்துக்காகப் போராட வேண்டியிருக்குமென்றே நம்புகிறேன். ஆகையால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொரு சந்ததியாரும், தங்களுடைய முன்னோர்களுடைய தவறுகளை உணர வேண்டும். அந்நிய ஆட்சிக்கு விரோதமாகப் போராடுவது சூது விளையாட்டை ஒத்ததாகும். புதிது புதிதான நிலைகளுக்கு எதிர்ப்பட வேண்டி யிருக்கும். முன்கூட்டித் தயாரித்து வைத்திருந்த யோசனைகளை யெல்லாம் அடிக்கடி கைவிட வேண்டியிருக்கும். வறுமையை முன் யோசனை யினால் விலக்கிவிட முடியாது. 'சர்வதேச சதுரங்கப் போர்டில் ஒரு விஷயம் முடிவு செய்யப்படுமுன், எத்தனையோ தலைமுறைகள் கடந்துவிடக்கூடும். ஆனால் ஒவ்வொரு சந்ததியாரும் தமக்கு முன்னிருந்தவர்கள் என்னென்ன தந்திரங்களை உபயோகித்தார்கள் என்றும் அவர்கள் எவ்வளவு வெற்றி பெற்றார்கள் என்பதையும் அறிந்து கொள்வது உசிதமாகும் என்று லஜபதிராய் புலப்படுத்தினார். பித்தன் வழியாகத் தமிழுலகம் இத்தெளிவைப் பெற்றது. கல்வியில் மெக்சிகோ வழிகாட்டுகிறது 'பித்தன் தேனியாகச் செயல்பட்டது. அக்கால மெக்சிகோவின் கல்வி முறை பற்றி ஹென்ரிஜொன்னாட் என்பவர் இந்துவில் எழுதியிருந்தார். அதன் சுருக்கத்தைப் பித்தன்' வெளியிட்டுத் தமிழர்களுக்குக் கண்ணைத் திறந்தது. திறந்ததும் மூடி உறங்கிவிட்டோம். இப்போதாவது அதைத் தெரிந்து கொள்வோம். ஆசிரியன் தன் மாணாக்கனுக்குப் புகட்ட வேண்டியது. கல்வி மட்டுமல்ல; தான் கற்ற கல்வியைத் தன் வாழ்க்கையில் பயன்படுத்தி, அதன்படி ஒழுக வேண்டும் என்னும் உண்மையே. ‘வாழ்க்கை என்றால் நிலத்தைப் பயிரிட்டுத் தன் பொருளாதாரத் தையும் சமுதாயத்தையும் சீர்படுத்திக் கொள்வதையே குறிக்கும். எனவே, அந்தப் பள்ளிக்கூடத்தின் முக்கிய வேலை இவற்றை நடைமுறைக்குக் கொண்டு வருவதேயாகும். 'பள்ளிக்கூடத்திற்கு மேஜை நாற்காலிகள் அவசியம் எனில், அவற்றை மாணாக்கர்களே செய்கிறார்கள். அவர்கள் சிறியவர்களா யிருந்தால், பெரியவர்கள் உதவி செய்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/292&oldid=787107" இலிருந்து மீள்விக்கப்பட்டது