பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ_து-சுந்தரவடிவேலு 281 தாம் கண்ணாகக் காத்து வளர்த்த காங்கிரசை அதன் தொண்டிலே பெற்ற பெரும்புகழை, அதன் தொண்டிற்காகத் திரட்டியிருந்த செல்வாக்கை ஒருசேர உதறிவிட்டு, காங்கிரசில் இருந்து வெளியேறியவர் ஈ.வெ.ரா. பிள்ளைப் பருவத்திற்குத் தைத்த சொக்காய், வாலிபப் பருவத்திற்குச் சரியாக இராது. வேறு வழியின்றி, அதை ஒதுக்கிவிட வேண்டியதே. அந்த நிலையில் இருந்தார் பெரியார். 'காங்கிரசு, அரசியல் விடுதலையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. சமுதாயச் சிக்கல்களை ஆயவும் ஆயத்தமாக இல்லை. எனவே, விரிந்த தொண்டிற்கு இவ்வமைப்பு உதவாது. இந்த முடிவுக்கு வந்த ஈ.வெ.ரா. பொதுத் தொண்டு விலை வணிகராக நடந்து கொள்ளவில்லை. தியாகியாக நடந்து கொண்டார். சுயமரியாதை இயக்கத் தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறிப் புதிய, புரட்சிகரமான சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். சமுதாயத்திலுள்ள பல்வகைக் கேடுகளையும் ஒரே நேரத்தில் தாக்கினார். - ஈராயிரம் ஆண்டுகளாக நிலைபெற்றுள்ளவை என்று தெரிந்தும் தயங்காது, மலைக்காது சாடினார். - சாதி ஏற்றத்தாழ்வைச் சாடினார். கலப்பு மணத்தை ஆதரித்தார்; புரோகித மறுப்பு மணத்தை ஊக்குவித்தார். விதவை மறுமணத்திற்குத் துணை நின்றார். பொட்டுக்கட்டும் முறையை ஒழிக்க உதவினார். சமபந்தி முறையை வாழ்க்கை முறையாக்கினார். சாதிப் பெயர்களைப் போட்டுக் கொள்வதைக் கண்டித்தார். பழமை விரும்பிகள் மிரண்டனர்; முறைத்தனர்; முழங்கினர்; பண்டைச் சாத்திரங்களைப் பழமைப் பழக்கங்களைக் குறுக்கே போட்டனர். 'அவை புனிதமானவை அல்லவா? காக்கப்பட வேண்டியவை அல்லவா? என்று அறை கூவல் விட்டனர். ஈ.வெ.ரா. சளைக்கவில்லை. சமய சாத்திரங்களை ஆய்ந்தார். Hாட்சிப் பார்வையோடு ஆய்ந்தார். மனித சமத்துவ நோக்கோடு ஆய்ந்தார். மனிதனை மனிதனாக மதிப்பதற்குத் தடையாக இருக்கும் எதுவும் ?ற்பதற்குரியது அல்ல என்று, தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் முழங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/323&oldid=787160" இலிருந்து மீள்விக்கப்பட்டது