பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 நினைவு அலைகள் வணிகனாக. அப்படி வரும்போது, உட்கார்ந்து விற்க மாட்டேன். எதற்கும் வரம்பு வைத்துக்கொள்ள வேண்டும். இதை இறுமாப்பு என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்,' இந்த மரபு, பட்டுப்போய் பல்லாண்டுகள் ஆயின. முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் சோவியத் நாட்டிற்குச் செல்ல நேர்ந்தது. அங்கே கண்டேன், திரு. குருசாமியின் போக்கை. உள்ளாட்சி மன்றத்திற்கோ, குடியாட்சி மன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுப் பண்ணைக் குடியானவர் என்ன செய்வார்? பண்ணைத் தொழிலை விட்டு விடுவாரா மன்றத்தொழிலையே பிழைப்பாக மாற்றிக் கொள்வாரா? கையூட்டை எதிர்பார்க்கும் நிலைக்கு ஆளாக்கிக் கொள்வாரா? இல்லை; இல்லை; இல்லை. மன்றக்கூட்டங்கள், குழுக்கூட்டங்கள் நடக்கும்போது மட்டும் வேலைக்கு வரமாட்டார். மற்ற நாள்களில் பழைய பணியில் ஈடுபடுவார். தொழிற்சாலைகளில், அலுவலகங்களில், வேலை செய்யும் மன்ற உறுப்பினர்களும் அப்படியே நடப்பார்கள். வேலைகளும் கெடாமல், ஆட்சி மன்றங்களில் பொதுமக்களின் உண்மையான குரல்களும் ஒலிக்க வகைசெய்துள்ள சோவியத் ஆட்சிமுறை, அது கிடக்கட்டும். அடிமை விரும்பிகளும் சுதந்திர வேட்கையுள்ளவர்களும் என் கதைக்கு வருவோம். நான் கல்லூரி மாணவனாக இருந்த காலம் இந்திய விடுதலைப் போரொன்று உருவான காலம். காந்தியடிகளார், உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு மக்களை ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். என்னுடைய நண்பர்களில் பெரும்பாலோர் விடுதலை இயக்கத்தின்பால் பற்றுடையவர்கள். அன்றுள்ள சாதி வெறி நிலையில், ஆங்கிலேயர் வெளியேறக்கூடாது' என்னும் கருத்துடைய இரண்டொருவர் எனக்கு மிக நெருக்கமானவர். அதிலே ஒருவர், ஒரு மாவட்டத்துணைத்தண்டல் நாயகத்தின் மகன். அவர் என் வகுப்பு மாணவர்; பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். என்னிடம் ஒளிக்காமல் பேசுவார். அவர், உப்புச்சத்தியாகிரகம் வெற்றி பெறாது என்று அறுதியிட்டுக் கூறினார். அக்கூற்றுக்கு ஆதரவாக என்ன சொன்னார் தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/340&oldid=787179" இலிருந்து மீள்விக்கப்பட்டது