பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 நினைவு அலைகள் சமுதாயப் புரட்சியாளர் பாடோ வாழ்நாள் முழுவதும் தொடர் வேதனை: தொல்லை; சித்திரவதை ஆகியவற்றை அனைத்துக் கொள்வதாகும். தண்டிக்கப்பட்டுப் புறப்பாட்டுக்கு உரியவர்களாக மாட்டார். அகப்பாட்டுக்குக் கருப்பொருளாக்க அனைவரும் அஞ்சும் சமுதாயம், சுட்டெரிப்பதுபோல் பார்க்கும்; உற்றார் உறவினர் உறுமுவர். நண்பர்கள் பின்னால் நகைப்பர். சட்டமோ கழுதை. புரோகிதம் இல்லாத கலப்புத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது” என்பது அக்கால நெறி. அத்தனையும் அறிந்தும், மோகத்திற்குச் சமாதானம் காணாமலும், தெரிந்தே, வேண்டுமென்றே ஏற்பாடு செய்யப்படும் கலப்பு மனங்களைத் துணிந்து ஏற்றுக்கொண்ட சுயமரியாதை இயக்க முன்னோடிகள் நெருப்பாற்றில் குதித்தபோதிலும் ஒருங்கு இணைந்த தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்குவதில், அரிய பணி புரிந்துள்ளனர். அவர்களில் முதல்வரை - திரு. குருசாமியை அறிமுகப்படுத்திய போது, நான் பரவசமானேன். அந்த அறிமுகம் எப்படித் தழைத்தது என்பதை உரிய இடங்களில் குறிப்பேன். பொறியியல் படிப்பு வேண்டாம் நான், இண்டர்மீடியட்டு வகுப்பை முடிக்கும் தருவாயில், அடுத்து என்ன படிப்பது என்னும் கேள்வி முளைத்தது. என்னுடைய உறவினர்களாகிய திரு. எம்.ஏ. சம்பந்தமூர்த்தியும் அவரது தம்பி எம்.ஏ. திருநாவுக்கரசும் அப்போது கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. பட்டத்திற்குப் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார்கள். அவர்கள் அழைப்பின் பேரில், நான் அடிக்கடி அங்குச் செல்வதுண்டு. பொறியியல் கல்லூரியில் சேரும்படி அவர்கள் ஆலோசனை கூறினார்கள். என்னுடைய தந்தையின் விருப்பம் என்ன? நான் பொறியியல் பட்டம் பெறவேண்டுமென்பது. அதற்கு வேண்டிய கணக்கு, பெளதிகம், வேதியியல் ஆகியவற்றை விருப்பப் பாடமாக எடுத்திருந்தேன். அவற்றில் நன்றாகத் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. இடம் பெறுவதும் எளிதாகும், தேர்ச்சி பெறவும் தடையிராது. படித்த பிறகு நல்ல வேலை. ஆகவே பொறியியல் படிப்பே உனக்கு நல்லது என்று என்னுடைய தந்தையும் தாய் மாமாவும் விரும்பினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/358&oldid=787198" இலிருந்து மீள்விக்கப்பட்டது