பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 நினைவு அலைகள் "மனச்சான்றுப்படி நடந்தோம்; வந்ததை ஏற்றுக் கொள்வோம். குற்றம் புரியாமலே பழிக்கு ஆளானாலும் ஒடி ஒளியத் தேவையில்லை' என்று என்னைத் தேற்றிக் கொண்டேன். படிப்பும் விளையாட்டும் நான் மாணவனாக இருந்தபோது சிறப்புப் பாடம் படிப்போர், ஒரளவு ஆங்கிலமும் படிக்க வேண்டும்; அது உரைநடைப் பகுதியே. திரு. வேங்கடாசலம் என்பவர் ஆங்கிலப் பாடம் எடுப்பார் பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பார். முதலாண்டில் பொருளியல் பாடங்கற்றுக் கொடுத்தவர் திரு. வேங்கடாச்சாரி. அவர் புதுப்புது நூல்களைப் படிப்பார். அவற்றிலிருந்து தகவல்களைச் சேகரிப்பார்; அவற்றைத் தம்முடைய பழைய குறிப்பு நூலில் எழுதிக்கொண்டு வருவார். அதை வைத்துக் கொண்டே பாடஞ் சொல்லுவார். முறை பழையது. குறிப்பு நூல் பழையது. ஆனால் செய்திகள் புள்ளிவிவரங்கள் புதியன. எனவே, அவரது பேச்சில் சிறிது தடுமாற்றம் இருந்ததை நாங்கள் பொருட்படுத்தவில்லை. முதலாண்டிலேயே இந்திய வரலாறு ஒரு பாடம். அதைப் பேராசிரியர் அரங்காச்சாரி கையாளுவார். பேச்சு மடமடவென்று ஒடும். அந்த ஓட்டத்தில் குறிப்பு எடுக்க முடியாது, திண்டாடுவோம். வரலாற்றுப் பாடத்தில் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்த பேராசிரியர் அரங்காச்சாரி எங்கள் எல்லார் மதிப்பையும் பெற்றிருந்தார். படிப்பது போக, விளையாட்டைப் பற்றிச் சில சொற்கள்: விக்டோரியா மாணவர் விடுதியில் ஈராண்டு டென்னிஸ் ஆடி, ஒரளவு திறமை பெற்றேன். ஆயினும் சிறப்புப் படிப்பிற்காக வெளியில் இருந்து வந்தவர்கள் பலர், டென்னிஸில் சேரப் போட்டியிட்டார்கள்; திறமை அடிப்ப டையில் சேர்ந்தார்கள். எனக்கு இடம் கிடைக்கவில்லை. ஆகவே வேறுவகை உடற் பயிற்சியில் அதிகம் ஈடுபட்டேன். மாலையில் கடற்கரையில் இரும்பு வாராவதி முதல் சாந்தோம் முனைவரை நடப்பது, நாள் தவறாத உடற் பயிற்சி. அதோடு, மேசை டென்னிஸ் கற்றுக் கொண்டேன். அதிலே, சராசரி மாணவரைக் காட்டிலும் அதிகம் திறமை பெற்று விளங்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/398&oldid=787255" இலிருந்து மீள்விக்கப்பட்டது