பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 355 எதிர்பாராமல் ஒருமுறை அவர் நெஞ்சில் ஏற்பட்ட வடுவை எனக்குக் காட்டிவிட்டார். என்ன வடுவை? மாநிலக் கல்லூரித் தேர்தலில் நான் திரு. குப்புசாமிக்கு ஆதரவு கொடுக்காததை உடன் இருந்த நண்பர்களுக்குக் குத்தலாகச் சுட்டிக்காட்டினார். அது என்னைச் சுட்டது. தேர்தல் என்பது தனிப்பட்ட நட்பின் நன்றியின் வெளிப்பாடாக மட்டும் இருந்தால், பொதுநலன் பாதிக்கப்படலாம். யாருக்கு வாக்களிப்பது என்பதை வள்ளுவர் வழியில் முடிவு செய்ய வேண்டும். வள்ளுவர் வழி என்ன? "இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்' என்பதாகும் அல்லவா? அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் எது? தேர்தல்களின்போது, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டு, குறிப்பிட்ட காலகட்டத்தில் எவ்வெப் பணிகள் ஆற்றப்பட வேண்டும்; அதை ஆற்றக்கூடிய திறமை உடையவர்கள் எவர் எவர்? அப்படி ஆற்றும்போது, மாறுபட்டவர்களையும் அரவணைத்து அமைதிப்படுத்தி முன்னேறுவார்களா? மாறுபட்டவர்களைப் பகைவர்களாகவே மாற்றி, அமைதியைக் குலைப்பார்களா? இவற்றைக் கணக்கில் கொண்டு வாக்களித்தல் வாக்காளர்களின் தெளிவான அரசியல் முதிர்ச்சியைக் காட்டும். எடுத்துக்காட்டொன்று நினைவிற்கு வருகிறது. இரண்டாவது உலகப் போர் மூண்ட பிறகே பிரிட்டன், ஆட்சித் தலைமையைச் சர்ச்சிலிடம் ஒப்படைத்தது. சர்ச்சில் பிரிட்டனுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். அடுத்து வந்த பொதுத் தேர்தலில் சர்ச்சிலின் கட்சியைப் பிரிட்டன் ஆளவிட வில்லை. ஏன்? போராடச் சர்ச்சில் அமைதிப் பணிக்கு அட்லி என்பது பிரிட்டானியர்கள் எடுத்த முடிவு. நான் கல்லூரி மாணவப் பருவத்தில் தேர்தலில் இலாலிக்கு வேலை செய்தது சரி என்பதில் எனக்குத் தெளிவு இருந்தது. திரு. குப்புசாமி "-4க்காட்டியபோதும் எனக்குக் குழப்பம் சிறிதும் ஏற்படவில்லை? ஆனால் , திரு. குப்புசாமி அய்யர் எத்தனை எத்தனை பெரியவர்களிடம் 14. எப்படிச் சொன்னாரோ? அதற்காக நான் எவ்வளவு விலை கொடுக்க நேரிடுமோ, இப்படி ஐயங்கள் ஏற்பட்டன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/397&oldid=787253" இலிருந்து மீள்விக்கப்பட்டது