பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 நினைவு அலைகள் செயல்திறன், பொறுப்புணர்ச்சி, நேர்மை ஆகியவை கவனிக்கப்பட வேண்டும். 'இலாலிக்கு இத்தனையும் இருக்கிறது. அவர் இஸ்லாமியர் என்பதும், மைசூர்க்காரர் என்பதும் பொருத்தம் அற்றவை. பிந்திய நிலை, அவருடைய பதவிப் பணியைப் பாதிக்காது.' என் நெஞ்சில், இப்படிப்படவே பளிச்சென்று அதைச் சொல்லிவிட்டேன். என்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாமென்று, திட்டவட்டமாகக் கூறிவிட்டேன். என் பழைய நண்பர் குப்புசாமிக்கு மிகப் பெரிய ஏமாற்றம். 'போயும் போயும் உன்னிடம் அவற்றைச் சொன்னேனே! நீதான் எல்லோரும் ஒன்று என்பதை மெய்யாக நம்புகிறவனாயிற்றே" என்று சலிப்போடு சொல்லிவிட்டு, விடைபெற்றார். என் ஆர்வம் பெருகிற்று. இலாலிக்கு ஆதரவாகத் தேர்தல் களத்தில் குதித்தேன். சுழன்று சுழன்று பணியாற்றினேன். தேர்தல் நடந்தது. முடிவு அறிவிக்கப்பட்டது. என் ஆதரவு பெற்ற திரு. இலாலி, தாராளமான பெரும்பான்மை யோடு தேர்ந்தெடுக்கப்பட்டார். என் மகிழ்ச்சிக்கு ஒர் எல்லையுண்டோ? இலாலிக்கு வாக்களித்ததைப் பற்றி, யாரும் குறைபட்டுக் கொள்ள நேரிடவில்லை. அவ்வளவு திறமையாக அவர் செயல்பட்டார். அதைவிடச் சிறப்பு, எல்லோரிடமும் இனிமையாக நடந்து கொண்டார். போட்டி இட்டவர்களோடும் பகையுணர்ச்சியைப் பெருக்கிக்கொள்ளவில்லை. என் நேர்மைக்கு ஏற்பட்ட சோதனை தோற்ற திரு. குப்புசாமி, எனக்குப் பகையாகிவிட்டாரா? இல்லை. நண்பராகவே தொடர்ந்து இருந்தார். வாழ்க்கையோட்டம் அவரை எங்கெங்கோ கொண்டு போயிற்று. பட்டதாரியான பின் திரு. குப்புசாமி, சிற் சில பதவிகளில் இருந்துவிட்டு, இந்திய அரசில் சேர்ந்தார். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நான் சென்னை மாநிலத்தின் பொதுக்கல்வி இயக்குநராக, தில்லிக்குச் செல்லும் பேறு பெற்றேன். நண்பர் குப்புசாமியைக் கண்டேன். பழைய பாசத்தோடு நடந்து கொண்டார். அடுத்தடுத்து, பலமுறை தில்லியில் அவரைக் கண்டேன்: அளவளாவினேன். அவர், கலகலப்பான பேர்வழி. திரு. குப்புசாமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/396&oldid=787251" இலிருந்து மீள்விக்கப்பட்டது