பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 நினைவு அலைகள் கடைசித் தேர்வு நடந்த நாள் மாலை, பேராசிரியர்கள் எங்களுக்குத் தேனிர் விருந்து கொடுத்தார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் பரிட்சையை எப்படி எழுதினார்கள் என்று சொல்லத் துடித்தார்கள். எதிர்பார்த்ததைவிட நன்றாக எழுதியவர்கள் சிலர் எதிர்பார்த்த அளவு நன்றாக எழுதாதவர்கள் சிலர். நான் வாய்மூடிக் கொண்டிருந்தேன். பேராசிரியர் கள்ளுக்காரன் என்னைச் சுட்டிக்காட்டி, சுந்தரவடிவேலு ஏமாற்றமும் அடைய வில்லை, திடீர்ப்பரிசும் பெறவில்லை என்று ஊகிக்கிறேன்' என்றார். நான் முறுவல் பூத்தேன். தேர்வு முடிவு வந்தது; நான் தேர்ச்சி பெற்றேன்; மகிழ்ந்தேன். கல்லூரி திறந்ததும் சான்றிதழ்கள் பெறச் சென்றேன். பேராசிரியர் கள்ளுக்காரன் என்னைப் பாராட்டிவிட்டு நல்ல சான்றிதழ் கொடுத்தார். இந்திய வரலாற்றுப் பேராசிரியர் அரங்காச்சாரி நல்ல சான்றிதழ் தந்தார். ஆனால், அதற்குமுன் எங்கள் அனைவர் பேரிலும் குறைபட்டுக் கொண்டார். என்ன குறை? 'போயும் போயும் உங்களுக்குப்பாடம் சொல்ல நேர்ந்ததே. நிறைய மதிப்பெண் பெற்றவர்கள் என்னும் அடிப்படையில் மாநிலக் கல்லூரியில் சேர்ந்த நீங்கள் தேடிச் சேர்க்காத புகழை, பச்சையப்பன் கல்லூரி மாணவர் தட்டிக்கொண்டு போய்விட்டார். அவர் பெயர் எனக்குத் தெரியாது. பாடம் சொன்னால் அப்படிப்பட்டவருக்குச் சொல்ல வேண்டும். 'அக்கல்லூரி மாணவர்கள் எழுதிய கட்டுரைத் தாள்களை நான் திருத்தினேன். ஒரு மாணவர் எவ்வளவு சிறப்பாக எழுதியிருந்தார் தெரியுமா? "பொருளடக்கத்தில் சில பேராசிரியர்களே பொறாமைப்படும் அளவுக்கு இருந்தது. அவருடைய ஆங்கில நடை, ஆங்கிலப் பேராசிரியர்களுக்குக்கூட வருமா என்பது ஐயம்! இதுவரை அத்தகை" சிறந்த தாளைத் திருத்தியதில்லை. 'எனவே மூன்று கட்டுரைக்குப் பதில் இரு கட்டுரைகளே எழுதியிருந்தும் முதல் மதிப்பெண் அவருக்குக் கொடுத்தேன்; எவ்வளவு கெட்டிக்கார மாணவர் ஆனால் ஏனோ அவர் எல்லாத் தேர்வுகளும் எழுதவில்லை' என்று மிகவும் குறைபட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/424&oldid=787310" இலிருந்து மீள்விக்கப்பட்டது