பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 403 டாங்கே, அதிகாரி, எம்.ஜி. தேசாய், ஸ்பராட் ஆகிய முப்பத்திரண்டு பேர்கள் இந்தியாவில் ஆங்கில ஆட்சியைக் கவிழ்க்கப் பயங்கர சதி செய்தார்கள் என்பது வழக்கு. அவ்வழக்கு நான்கு ஆண்டுகள் நடந்தது. அப்போது குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் சிறையில் கிடந்தார்கள். இறுதியில் இருபத்தேழு பேர்களுக்கு வெவ்வேறு காலக் கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைத்தது. அம்முடிவினைக் கோடிட்டுக் காட்டித் தலையங்கம் எழுதிய பெரியார். 27 பேர்கள் என்ன, 270 பேர்கள், இல்லை 2700 பேர்கள், அதற்கு மேலும் 27,000 பேர்களைக் கொன்றாலும் பொதுஉடைமைக் கொள்கை பரவுவதை எந்த அரசாலும் தடுக்க முடியாது' என்று எழுதினார். அது, எரிகின்ற நெருப்பில் நெய்யைக் கொட்டியதுபோல் ஆயிற்று. 'குடிஅரசு போய் புரட்சி' தோன்றியது 'குடிஅரசின் உள்ளடக்கத்தில் சமதர்மப் பகுதி அதிகமாக ஆக, அரசின் கெடுபிடியும் அதிகமாயிற்று. குடிஅரசுக்குக் காப்புப் பணமாக ரூபாய் 2000 கட்ட ஆணையிட்டது. பெரியார் அதற்கு உடன்பட வில்லை. 'குடிஅரசை நிறுத்திவிட்டு புரட்சி' என்ற பெயரில் வார இதழைத் தொடங்கினார். பெயருக்கேற்ப அதில் சமதர்மப் புரட்சி மணம் வீசியது. சோவியத் சமதர்ம நாட்டின் ஐந்தாண்டுத் திட்டம், நீதிமுறை பற்றிச் சிறப்புக் கட்டுரைகள் தொடர்ந்து வந்தன. இதற்கு இடையில் அனைத்திந்திய அரசு, இந்தியாவில் பொதுஉடைமைக் கொள்கை பரவாதபடி தடுக்க முடிவு செய்தது: அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தென்னிந்தியாவில் அடக்குமுறை பானம், பெரியாரின் மேல் பாய்ந்தது. 'இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?' என்ற தலையங்கத்தில் அரச வெறுப்பும், பொதுஉடைமைப் பரப்புதலும் கலந்திருப்பதாகப் பெரியாரையும் அவரது தங்கை கண்ணம்மாவையும் கைது செய்து, அரசு வழக்குத் தொடுத்தது. இருவரும் முடிவில் தண்டிக்கப்பட்டார்கள். என் வீட்டில் திருமணப் பேச்சு இடைவிடாது கேட்டது 'ஏதாவதொரு வேலையில் நிலையாகச் சேர்ந்தபிறகே, திருமணம் செய்துகொள்வேன் என்று நான் கூறியது எவருக்கும் பிடிக்கவில்லை. அது அவர்களுக்குத் தேவையில்லாத நோன்பாகத் தோன்றிற்று. வேறு சாதியில்தான் திருமணம் செய்து கொள்வேனென்று சொல்லி, நான், அக்காலகட்டத்தில் உறவினர்களை உஷார்படுத்தவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/446&oldid=787345" இலிருந்து மீள்விக்கப்பட்டது