பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.14 = நினைவு அலைகள் - - - அவற்றைப் பொது உடைமையாக்குவது என்னும் இலட்சியம் இந்திய முதலாளிகளையும் வெள்ளை முதலாளிகளையும் உலுக்கிற்று. இரயில்வேக்கள், பெரிதும் வெள்ளையர்களின் சொத்தாக இருந்தன. அவற்றை நாட்டுடைமையாக்குவது என்பது விடுதலை கோருவதைப் போன்றே, அதிர்ச்சியூட்டும் முடிவாகத் தோன்றியது. விளைநிலங்களை நாட்டுடைமையாக்கும் குறிக்கோள், எண்ணற்ற இந்திய நிலமுடையோருக்குக் கிலியை ஊட்டியது. என் குடும்பத்தில் நிலம் உண்டு. அதைப் பறித்துக் கொள்ளும் குறிக்கோள், அடிக்கடி, உரையாடலுக்குக் கருப்பொருளாக அமைந்தது. என் தந்தை இம்முடிவு பற்றிக் கலக்கம் கொள்ளவில்லை 'அப்படியொரு நிலை வரும்போது வரட்டும், நம் பிள்ளைகள் அனைவருக்கும் படிப்பும் பயிற்சியும் இலவசமாகக் கொடுத்து, வேலைகளையும் கொடுத்து, சம்பளம், மருத்துவ வசதி, வீடு ஆகியவற்றை அரசே கொடுக்குமானால், நமக்கென்று தனியாக நிலம் எதற்கு? 'இவ்வாண்டு விளைந்ததுர் அடுத்தாண்டு புயலில் அழிந்தது என்னும் திண்டாட்டம் தொலையட்டுமே இப்படி என் தந்தை நினைத்தார். என்நிலை என்ன? பொதுஉடைமைக் கொள்கையே என் வாழ்க்கைக் குறிக்கோள் ஆனது முன்னர், பொருளியல் மாணவனாக, தனியுடைமை, சமதர்மம், பொது உடைமைப் பொருளியல் முறைகளைப் பற்றி, விரிவாகப் படித்தேன். அவை பற்றி வந்த கேள்விகளுக்குத் தக்க விடையெழுதி, சென்னைப் பல்கலைக் கழகத்தின் மூன்றாம் இடத்தைப் பிடித்தேன். வெறும் கருத்தாக மட்டும் படித்த சமதர்மத்தை நான் பின்பற்றிய கொள்கைக்காரர்கள், குறிக்கோளாக ஏற்றுக்கொண்ட பிறகு, அது, எனக்குக் கருத்து மண்டலத்தில் மட்டும் மிதந்து கொண்டிருக்குமா? இராது. ஆழ்ந்து சிந்தித்து நல்ல முடிவு செய்து, உணர்வு மண்டலத்திலும் கொள்கை மண்டலத்திலும் ஏற்றுக்கொள்ளவோ, தள்ளவோ வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். நிலைக்கு ஏற்ற நினைப்பு என்பார்கள். வேலை தேடி அலைந்து, சலித்த என் உணர்வு, உற்பத்திச் சாதனங்களை நாட்டுடைமை யாக்குவதை, சமதர்மப் பொருளியல் முறையைக் கொண்டு வருவதை, நோகாமல் ஏற்றுக் கொண்டது. சமதர்மமே என்னுடைய வாழ்க்கையின் கறிக்கோளாகவும் மாறியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/457&oldid=787357" இலிருந்து மீள்விக்கப்பட்டது