பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ. து. சுந்தரவடிவேலு 419 கவனித்தோம். பேருந்து வண்டியில் காஞ்சிக்குத் திரும்ப முடிவு செய்தோம். அக்காலத்தில் சென்னைக்கும் காஞ்சிக்கும் இடையே சில பேருந்துகளே ஒடின. ஒன்றிற்கு ஒன்று இடைவெளி அதிகம். பேருந்து நிலையத்திற்குச் சென்று காத்திருப்பதற்குப் பதில், டாக்டர் வரதராசுலு நடத்தி வந்த தமிழ்நாடு’ நாளிதழின் அலுவலகத்தில் தமது நண்பர் ஒருவரைக் காண விரும்பினார், நண்பர் காஞ்சியார். நானும் உடன் சென்றேன். * நாங்கள் போனபோது, டாக்டர் வரதராசுலுவே அங்கிருந்தார். டாக்டரைக் காணக் காஞ்சியாரை அனுப்பிவிட்டு, நான் தாழ் வாரத்தில் காத்திருந்தேன். ஏழெட்டு மணித்துளிகளில் காஞ்சியார் வெளியே வந்தார். தமிழ்நாடு என்னை டாக்டர் பார்க்க விரும்புவதாகக் கூறி உள்ளே அழைத்துச் சென்றார்; டாக்டருக்கு அறிமுகம் செய்தார். நான் இருக்கையில் அமர்ந்ததும் டாக்டர் என்னைப் பார்த்து, 'நீங்கள் பொருளியல் படிப்பில் சிறப்புப் பட்டம் பெற்றதாகத் தெரிந்து கொண்டேன். அண்மையில் சட்டமாகிய ரிசர்வ் வங்கி சட்டம் பற்றித் தமிழில் சுருக்கமாகச் சொல்லுங்கள்' என்றார். 'ரிசர்வ் வங்கி ஏற்படுத்துவது எதற்கு? அது என்னென்ன செய்யவேண்டும்? இவை பற்றி, ஆங்கிலம் கலவாத தமிழில் எடுத்து உரைத்தேன். நான் சொல்லி முடித்ததும். 'இப்போது நீங்கள் சொல்லியது சாதாரண ஆளுக்கும் புரியும். இதையே சிறிய கட்டுரையாக எழுதிக் கொடுத்து விடுங்கள். இதோ தாள். அதோ மூலையில் மேசை, நாற்காலி, அங்குப் போய் உட்கார்ந்து எழுதிக் கொடுங்கள். உங்கள் நண்பர் காத்திருப்பார் என்றார். மறுக்க மனம் வரவில்லை. ஒரு மூலையில் உட்கார்ந்து கட்டுரையை எழுதினேன். முடித்ததும் டாக்டர் வரதராசுலுவிடம் கொடுத்தேன். அதைப் படித்துப் பார்த்தார், அது அவருக்குப் பிடித்தது. அதை வெளியிடும்படி உரியவருக்கு ஆணையிட்டார். அப்படியே வெளியாயிற்று. கட்டு ரையை வெளியிட ஆணையிட்ட டாக்டர் வரதராசுலு, 'நீங்கள் தமமாதானே இருக்கிறீர்கள்; வேறு வேலை கிடைக்கும் வரையில், ఖెతా துணை ஆசிரியராக இருங்களேன். அதற்கு இசைந்தால் நம் இந்திய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவான கட்டுரைகளைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/462&oldid=787363" இலிருந்து மீள்விக்கப்பட்டது