பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 நினைவு அலைகள் ஆங்கிலம் தமிழ் இரண்டிலுமே அந்த இளைஞர் படித்த நூல்களுக்குக் கனக்கில்லை. படிப்பிலே சிறந்து இருப்பதைப் போன்றே நாவன்மையிலும் எழுத்தாற்றலிலும் ஒளிவிடுகிறார். கல்லூரி மன்றங்களில் அவர் பேச்சுகள் சுண்டி இழுக்கும் தன்மையன. எல்லாவற்றைக் காட்டிலும் அவரிடம் பிடித்தது, அவர் நம் நீதிக்கட்சி மாணாக்கருக்குக் காட்டும் நன்னெறியைக் கடைப்பிடித்த தாகும். மாணவப் பருவத்தே அவர் படித்த அளவு அரசியல் நூல்களைப் படித்தவர்கள் இரார். ஆயினும் மாணவராக இருந்தபோது அரசியலில் கால் எடுத்து வைக்காமல் கடும் நோன்பு இருந்து வந்தார். படிப்பை முடித்த பிறகு, பொதுமேடைக்கு வந்துள்ளார். திருப்பூரில் செங்குந்தர் மாநாட்டில் அவர் பேசிய பேச்சைப் பாராட்டாதவர்கள் இல்லை. தலைவர் ஈ.வெ.ரா. மிகப் பாராட்டினார். காஞ்சி கல்யாணசுந்தரம் இப்படிப் படம் பிடித்துக்கொண்டு வந்தது எவரை திரு கா.ந. அண்ணாதுரையைப் பற்றியே. திரு அண்ணாதுரையின் வீட்டிற்குப் போகும் வழியில், நூல் விற்பனைக் கடை குறுக்கிட்டது. அதற்குள் நுழைந்தோம். புதிய இந்தியப்பதிப்பு ஒன்றைக் கண்டோம். அன்றுதான் அந்த ஆங்கில நூல் சென்னைக்கு வந்து சேர்ந்ததாம். அதைச் சுடச்சுட வாங்க நினைத்தேன். திரு காஞ்சியார் ஊக்குவித்தார். வாங்கினேன். விலை என்ன? ஒன்றரை ரூபாய். அது எவர் எழுதிய நூல் தெரியுமா? ஆங்கில எழுத்துலக மேதை பெர்னார்ட்ஷா எழுதியது. அந்நூலின் பெயர்? கடவுளைத் தேடி அலைந்த கறுப்புப் பெண்' என்பதாகும். அந்த நூலை வாங்கிக் கொண்டு திரு அண்ணாதுரையின் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தோம். அவர் வீட்டில் இருந்தார். அவருக்கு என்னைக் காஞ்சியார் அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணாவின் முடிவு திரு அண்ணாதுரையின் கட்டுரைத் தாளைத் திருத்தியவர் எங்கள் மாநிலக் கல்லூரியில் இந்திய வரலாற்றுப் பேராசிரியராக இருந்த திரு அரங்காச்சாரியார் ஆவர். மூன்று கட்டுரைகள் எழுதுவதற்குப் பதில், இரண்டு கட்டுரை களையே அண்ணாதுரை எழுதினாராம். இருப்பினும கட்டுரையின் உள்ளடக்கமும் ஆங்கில நடையும் அதுவரை காணாத அளவு சிறப்பாக அமைந்திருந்ததாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/469&oldid=787370" இலிருந்து மீள்விக்கப்பட்டது