பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 நினைவு அலைகள் தனியுறவில் எவர் பேரிலும் தம் கருத்துகளைத் திணிக்காத அவருடைய பண்பாடு அப்போது எனக்குப் புரியவில்லை. அண்ணா என்ன செய்யவேண்டும் என்று, என் பங்கிற்கு ஆலோசனை கூறிவைத்தேன். என்ன ஆலோசனை? "ஆங்கிலத்திலும் தமிழிலும் தனித்திறமை பெற்றிருக்கிறீர்கள். இரு மொழியிலும் கேட்டார் பிணிக்கும் நாவன்மையும் எழுத்து ஆற்றலும் இருக்கின்றன. அலுவலகங்களில் இவை மட்கி வீணாகிப் போகும். அரசு ஊழியத்திற்கோ, தனியார் அலுவலுக்கோ போகவேண்டாம். == 'விருப்பமான அரசியல் அல்லது சமூக இயல் அல்லது பொருளியல் இயக்கம் ஒன்றில் சேர்ந்து தொண்டாற்றுங்கள். இப்போதைக்கு அரைப் பட்டினியே பரிசாகலாம். எனினும் கால ஓட்டத்தில் நிறைவும் நிலையும் பெருகும். உத்தியோக விலங்கில் மட்டும் மாட்டிக்கொள்ள வேண்டாம். உங்களைப் போன்றவர்களுக்கு அது இடமல்ல. இவை என்னுடைய சிற்றறிவில் பட்டவை; தங்களிடம் ஒளிக்காமல் சொல்லிவிட்டேன். ' கடவுளைத் தேடிய கருப்புப் பெண் பட்டதாரி கா.ந. அண்ணாதுரையை நான் காஞ்சி கல்யாணசுந்தரத் தோடு சென்று பார்த்தபோது, என் கையில் பெர்னாட்ஷா எழுதிய ஆங்கில நூல் ஒன்று இருந்தது. அன்றுதான் சென்னைக்கு வந்து சேர்ந்த அந்த இந்தியப் பதிப்பை, அண்ணா என்னிடமிருந்து வாங்கிப் புரட்டிப் பார்த்தார்; திருப்பித் தந்தார். அண்ணாவோடு மனம் விட்டு உரையாடிவிட்டு நாங்கள் இருவரும் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டோம். அவ்வமயம் அண்ணா, 'அந்த நூலை என்னிடம் கொடுத்துவிட்டுப் போங்கள். இன்றே படித்து முடித்துவிட்டு, நாளைக் காலை, அதை உங்களிடம் சேர்ப்பிக்க ஏற்பாடு செய்கிறேன்' என்றார். அப்படியே, கடவுளைத் தேடிய கறுப்புப்பெண்' என்னும் நூலை அண்ணாவிடம் கொடுத்துவிட்டு வந்தேன். "கடன் வாங்கிய நூலை விழிப்போடு திருப்பி அனுப்புகிற பழக்கம் நம்மவர்க்குக் குறைவு என்பது என் மதிப்பீடு. அப்படியே அனுப்பாவிட்டால் என்ன? அதிக விலை இல்லை; மற்றொன்று வாங்கிக் கொள்ளலாம் என்ற நினைப்பில் கொடுத்துவிட்டு வந்தேன். நடந்தது என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/471&oldid=787373" இலிருந்து மீள்விக்கப்பட்டது