பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 நினைவு அலைகள் அதன்படி, திரு தனசிங்கைப் பார்த்தேன். அவரது அலுவலகம் எங்கே இருந்தது? பனகல் கட்டட வளைவில் இருந்தது: தெற்குப்புறத்தில் சிறிய ஒட்டுக் கட்டடத்தில் இருந்தது. அங்கு, திரு தனசிங்கைக் கண்டபோது, என்னுடைய அப்பாவும் மாமாவும் உடன் வந்தார்கள். எல்லோரிடமும் தனசிங் இனிமையாகவும் மரியாதையோடும் நடந்து கொண்டார். நான் உடனே சேர்ந்துவிட்டால், என் வே லை யின் அடிப்படைகளைக் கற்றுக் கொடுப்பதாகக் கூறினார். உடனே சேர உடன்பட்டேன். அப்பா இசைந்தார். எனவே, எதிர்பாராத விதத்தில் அன்றே அலுவலை ஏற்றுக் கொண்டேன். என் அலுவல் என்ன தெரியுமா? என்னுடைய அலுவல்கள் ஊராட்சி மன்றம் இல்லாத ஊர்களில் ஊராட்சி மன்றங்களை அமைத்தல். அம்மன்றங்களுக்கான தலைவர்கள், துணைத்தலைவர்கள். உறுப்பினர்கள் ஆகியோரைப் பஞ்சாயத்துச் சட்டமுறைப்படி தேர்ந்தெடுக்கச் செய்தல். ஊராட்சி மன்றங்கள் உள்ள ஊர்களில் அவற்றை ஊக்குவித்தல்; அந்த அந்த ஊர்களில் குடிநீர், சாலைகள், தெருவிளக்குகள் ஆகியவற்றை அமைக்க ஏற்பாடு செய்தல். திருவிழாக் காலங்களில் துப்புரவு ஏற்பாட்டினைச் செய்வித்தல், இயங்கும் ஊராட்சி மன்றங்களின் வரவு செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து அறிக்கை அனுப்புதல். இவ் வேலைகளைச் செய்வதற்காக நான் திங்களுக்கு இருபது நாள்கள் சுற்றுப் பயணத்தில் இருக்க வேண்டும். அக்காலக் கணக்குப்படிஅய்ந்து மைல்களுக்கு அப்பால் உள்ள ஊருக்குச்செல்லும் நாள்களே பயண நாள்களாகக் கருதப்படும். இருபது நாள்கள் பயணத்திற்கு, பயணப்படி எவ்வளவு? திங்களுக்கு முப்பது ரூபாய்கள். அன்றைய நிலையில் அது குறைவல்ல. பேருந்துக் கட்டணம் சராசரி முக்கால் ரூபாய்க்கு மேற்படாது. சாப்பாட்டுச்செலவும் மிகச் சொற்பம். ஏன்? எங்கோ ஒரிடத்தில்தான் ஒட்டல் இருக்கும். காசு கொடுத்துச் சாப்பிடுவது அங்கேதான். மற்ற ஊர்களில் விரும்பி அளிக்கும் தண்டச்சோறு கிடைத்தால் உண்டு; இல்லையேல் பட்டினி. உதவிப் பஞ்சாயத்து அலுவலருக்குத் தனியாக மேசை நாற்காலி உண்டு; பதிவேடுகள் உண்டு; அஞ்சல் தலைகள் போதிய அளவு வழங்கப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/487&oldid=787390" இலிருந்து மீள்விக்கப்பட்டது