பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ_து-சுந்தரவடிவேலு 453 தொழுவத்தின் பக்கம் சென்றார். நொடியில் இளநீர் வந்தது. அதைக் குடித்துக் களைப்பாறினேன். கணக்குத் தணிக்கை முடியவும், பகல் உணவு வேளை வரவும், சரியாக இருந்தது. இருவரும் கை அலம்பிக் கொண்டு, கூடத்தில் அமர்ந்தோம். சாப்பாட்டில் சங்கடம் தலை வாழையிலை போடப்பட்டிருந்தது. அதில் அப்பளம், வாழைக்காய்ப் பொரியல், ஊறுகாய், பருப்பு ஆகியவை பரிமாறப் பட்டிருந்தன. நாங்கள் உட்கார்ந்ததும் தும்பைப்பூ போன்ற சோறு பரிமாறப்பட்டது. வீட்டு நெய் ஊற்றப்பட்டது. பருப்புச் சோறு முடியும் வேளை வேலைக்காரப் பையன் குழம்பைக் கொண்டு வந்தான். அதில் வெள்ளைத் தலைகள் கண்ணில் பட்டன. 'என்ன குழம்பு?' என்று வினவினேன். 'முட்டைக் குழம்பு' என்ற பதில் கிடைத்தது 'நான் மரக்க மட்டுமே உண்பவன், முட்டை சாப்பிடுவதில்லை' என்று சொன்னதைக் கேட்டு, ரெட்டியார் முகம் வெளுத்துப் போயிற்று. 'எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன். எங்கள் வீட்டில் சாப்பிடு வேனென்றபோது, புலால் உண்பீர்களா வென்று நான் விசாரிக்கத் தவறிவிட்டேன். தயவுசெய்து மன்னியுங்கள்' என்று அழமாட்டாத குறைாக வேண்டினார். 'பரவாயில்லை. முட்டைக் கறி முதலியவற்றைப் பார்த்தால் எனக்கு குமட்டாது. அந்த அளவுக்கு மாணவர் விடுதியில் பக்குவம் பெற்று விட்டேன். எனக்குச் சாறு வரட்டும்; நீங்கள் முட்டைக் குழம்பு சாப்பிடுங்கள்' என்று தேற்றி, வேண்டினேன். அவர் ஒப்பவில்லை. எனக்காக அவரும் சாறும் சோறும் உண்டார்; பிறகு, நல்ல, வீட்டு மோரும் சோறும் உண்டோம். வாழைப்பழமும் கிடைத்தது. அதையும் உண்டு மகிழ்ந்தேன். வெயில் தாழ அடுத்த சிருக்குப் பயனமானேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/496&oldid=787400" இலிருந்து மீள்விக்கப்பட்டது