பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 461 நடவடிக்கை எடுக்கக் கூடாதென்று ஏழு நாள்களில் விளக்கம் சொல்லவும். இப்படி அந்த மெமோ பேசிற்று. மனம் நொந்தேன் எனக்கு எப்படியிருந்தது? பச்சைப் புண்ணில் மிளகாய்ப் பசையைப் பூசினாற்போல் இருந்தது. ஆதாரமற்ற குற்றச்சாட்டின் வழியாக வலுச்சண்டைக்கு இழுக்கும் கலையை அதுவரை நான் அறிந்ததில்லை. வருங்காலத்தில், வாழ்நாள் முழுவதும் அடுத்தடுத்து இத்தகைய சண்டைகள் ஊடே செல்ல நேரிடும் என்று அப்போது என் அறிவில் மின்னவே இல்லை. தமிழ்நாட்டின் எல்லாத் துறைகளிலும் எல்லா மக்களும், பிறர் செய்யாத குற்றத்திற்கு ஆயுள் தண்டனை கொடுக்க முனைந்து, தங்கள் வளர்ச்சியை அழித்துக் கொள்கிறார்கள் என்பதையும் அன்று அறியேன். இத்தகைய தொல்லைகளுக்கு ஆளாகி ஆளாகியே, தமிழ்நாட்டில் பல மட்ட அலுவலர்களும் நைந்து, பொதுமக்கள் நலனைக் கருத முடியாதவர்களாகி விடுகிறார்கள் என்பதைப் பிற்காலத்தில் முழுமையாக உணரும் வாய்ப்புகளை நிறையப் பெற்றேன். 1935 இல் செய்யாத குற்றத்திற்கு என்னிடம் விளக்கம் கேட்கும் மெமோவைப் பெற்றபோது, அதிர்ச்சி அடைந்தேன். தொடர்ந்து சில இரவுகள் தூக்கம் என்னை விட்டு அஞ்சியோடியது. என் விளக்கம் உரியபோது, விளக்கத்தை எழுதினேன். என்ன விளக்கம்? 'உதவிப் பஞ்சாயத்து அலுவலராகிய நான், திங்கள்தோறும் இருபது நாள்கள், அய்ந்து மைல்களுக்கு அப்பால் உள்ள ஊர்களுக்குச் செல்ல வேண்டும். அதற்காக எனக்குக் கொடுக்கப்படும் மொத்தப் பயணப்படி திங்களுக்கு முப்பது ரூபாய்கள் ஆகும். அதாவது, சராசரி, நாளொன்றுக்கு ஒன்றரை ரூபாய் படியாகப் பெறுகிறேன். 'பணம் வரும்வரை கெளல் பஜாரில் தங்கியிருந்தால், நாலரை ரூபாய் படிச் செலவாகப் பெற்றிருப்பேன். அப்படி அவ்வூரில் தங்காவிடில் ஏற்படும் செலவு அரை ரூபாய் மட்டும்தான் என்பது எனக்குத் திட்டமாகத் தெரியும். தங்கினால் ஏற்படும் செலவோ, இருநாள் படியிலிருந்து பல நாள் படியாகவும் நீண்டு வளரலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/504&oldid=787411" இலிருந்து மீள்விக்கப்பட்டது