பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 475 உணர்ந்தேன். கண் விழித்துப் பார்த்த நான், ஊழியர் அருகில் நிற்பதைக் கண்டேன். அவர் என்னை நெருங்கினார். 'அய்யா பொழுது விடிய, பாலைத் தேடிச் சென்றேன். இவ்வூரில் எந்த வீட்டிலும் எருமையோ, பசுவோ இல்லை. எல்லா வீடுகளிலும் செம்மறி ஆடுகளே உள்ளன. ஆட்டுப்பால் மட்டுமே கிடைக்கும். பரவாயில்லை என்றால் செம்மறி ஆட்டுப்பால் வாங்கி வருகிறேன்' என்றார். 'பால் இல்லாவிட்டால், மோர் வாங்கிவா என்றேன். 'அதிகாலையில் மாட்டுப்பால் கிடைக்காத ஊரில், மாட்டுமோர் எப்படிக் கிடைக்குங்க?' என்றார். பசியில் எந்த அளவு அறிவு மழுங்கி விட்டது என்பதை உணர்ந்தேன். ஊழியரின் கிண்டலுக்கு ஆளாகிவிட்டதைப் பற்றி வெட்கப்பட்டேன். பல்லைக் கடித்துக் கொண்டு, அவருக்கு ஆணையிட்டேன். என்ன ஆணை? கட்டை வண்டிப் பயணம் 'சிங்கல்பாடியிலிருந்து, கூடிய விரைவில் திருப்பெரும்பூதுார் போய்ச் சேர வேண்டும். எவ்வளவு கூலி கேட்டாலும் பேருந்து நிலையம் வரை வண்டி ஏற்பாடு செய்' இது என் ஆணை. சிறிது நேரத்தில் ஊழியர் முருகேசன் வேறொருவரோடு திரும்பி வந்தார். அவர் யார் ஊராட்சித் தலைவர். வெளியூர் சென்றிருந்த அவர், நள்ளிரவு திரும்பி வந்தாராம். 'பத்து மணி வரை பொறுத்தால், அரிசி வாங்கி வந்து, சோறாக்கிப் போட ஏற்பாடு செய்யலாம். காலையில் இந்த ஊரில் கூழோ பழஞ்சோறோ மட்டுமே கிட்டும். 'இங்கு இருந்து பிள்ளைச்சத்திரமே கிட்டவூர். அங்கே பஸ் கிடைக்கும். அங்கே போகக் கூண்டுவண்டி இல்லை. கூண்டு இல்லாத கட்டைவண்டி இருக்கிறது. இப்போதே வேண்டுமானாலும் புறப்படலாம், வண்டிக் குச்சிகளின்மேல் பாய் கட்டி' என்றார். ஊராட்சித் தல்ைவர். 'ஆம் அய்யா ஊர் முழுவதும் சுற்றிவிட்டேன். கூண்டுவண்டி இல்லை. பக்கத்துார் சென்று கொண்டுவர நேரம் ஆகும்' என்று முருகேசன் கூறினார். வேறு வழியில்லை; கட்டை வண்டியில் ஏறி, பிள்ளைச் சத்திரம் சென்றேன். மழை விட்டிருந்தது. வண்டியில் வைக்கோல் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தேன். பிள்ளைச் சத்திரத்தை நெருங்கியபோது, முருகேசன் என்னை எழுப்பினார். நான் விழித்துக் கண்களைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/518&oldid=787427" இலிருந்து மீள்விக்கப்பட்டது