பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 503 வாழ்ந்தார்; சேர்ந்த சொத்து முழுவதையும் பொதுநன்மைக்கு எழுதிவைத்தார், எப்படி? 'கல்விப் பணி என்னும் பெயரில் அறக்கட்டளையொன்றை நிறுவினார். தம் சொத்தை அதற்கு உயில் எழுதி வைத்தார். முழுக் கல்வி தந்து தம்மக்களை ஆளாக்கிவிட்டுவிட்டு, சொத்தைப் பொதுமையாக்கி விட்ட அவருடைய பாங்கு போற்றுதற்குரியதாகும். திரு. செ. தெய்வநாயகம் பன்னிரண்டு ஆண்டுகள் துனைப் பதிவாளராகச் சீரிய பணியாற்றிய பிறகு, அரசு ஊழியத்திலிருந்து ஒய்வு பெற்றார். சிறிது காலம் சென்னைச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக விளங்கினார். நீதிக்கட்சித் தொண்டைத் தொடர்ந்தார். தன்மான இயக்கத்தின் சுடர்களில் ஒன்றாக அருந்தொண்டாற்றினார். 1938 ஆம் ஆண்டு கட்டாய இந்திப் பாடத்தை எதிர்த்து, தமிழ்நாட்டில் பெருங் கிளர்ச்சி நடந்தது. அதன் அடையாளமாகச் சென்னை தியலாஜிக்கல் உயர்நிலைப் பள்ளியின்முன் மறியல் நடந்தது; பல திங்கள் இடையறாது மறியல் நடந்த வண்ணம் இருந்தது. அந்த இந்தி எதிர்ப்புப் போரின் முதல் சர்வாதிகாரியாக திரு. செ.தெ. நாயகத்தை, தந்தை பெரியார் நியமித்தார். அப்பொறுப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுப் போராடி சிறை வாழ்க்கையையும் மேற்கொண்டார். கல்வி ஒளி தந்தவர் நீதிக்கட்சி தோற்று, தளர்ந்திருந்த நிலையில், மக்களிடையே அதன் கொள்கைகளை மறுபடியும் பரப்பும் பொருட்டு நால்வர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவில் பெரியாரோடு டபிள்யூ. பி.ஏ. செளந்தரபாண்டியனோடு, செ.தெ. நாயகமும் இருந்தார் என்பதைக் குறிப்பிடுவது என் கடமை. திரு. செ.தெ. நாயகம் தம் பொருளைக்கொண்டு குலசேகரன் பட்டினத்தில், காலஞ்சென்ற தமது முதல் மனைவி நினைவாகத் தாயம்மாள் நடுநிலைப்பள்ளி'யைப் பராமரித்து வந்தார். அது இன்றும் சிறந்த முறையில் நல்ல கல்வித் தொண்டு ஆற்றி வருகிறது. சென்னைத் தியாகராய நகரில் அவர் தொடங்கிய தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளியாக வளர்ந்து இன்று மேனிலைப்பள்ளியாகச் செயல்படுகிறது. இரு பாலாரும் படித்துவந்த தியாகராயநகர் பள்ளியிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு, தனியான பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஒன்றும் 'கிளைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/546&oldid=787475" இலிருந்து மீள்விக்கப்பட்டது