பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 555 ஊழல் ஒழிக்கப்பட வேண்டியதே ஒழிய, மக்கள் பேச்சில் நிறைந்திருக்க வேண்டிய ஒன்றல்ல. தன் ஆட்சி பெற்ற இந்தியாவில் ஊழல் பேச்சுக்கு அளவுக்கு மீறிய மதிப்புக் கொடுப்பது, ஒரு புற்று நோயாக வளர்ந்துவிட்டது. எனவே, நான் கண்ட வேறு நிலைகளையும் இளைய தலைமுறைக்குக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் பஞ்சாயத்துத்துணை அலுவலராகப் பணியாற்றியபோது எவ்விதக் குற்றச்சாட்டுகளுக்கும் இடமில்லாத வகையில் பல ஊராட்சி மன்றங்கள் இயங்கின. திருப்பெரும்பூதுர் கோட்டத்திலாவது, இரு ஊராட்சித் தலைவர்களைக் கையாடல் குற்றத்திற்காக, வழக்கு மன்றத்தில், நிறுத்தி வைக்க நேர்ந்தது. அப்படிப்பட்ட நிலை, மதுராந்தகப் பகுதியில் ஏற்படவில்லை. ஏன்? திருப்பெரும்பூதுார் கோட்டத்தைக் காட்டிலும் செங்கற்பட்டு மதுராந்தகம் பகுதிகளில் வளம் அதிகம். மேலும், அக்காலத்தில் ஊராட்சித் தேர்தல்களில் போட்டிச் செலவு குறைவு. உள்ளுர்ப் பெரியவர்களையே வேண்டி விரும்பி, தலைவராகவோ உறுப்பினர்களாகவோ பிடித்து வைப்பார்கள். அப்படிப் பிடித்து வைக்கப்பட்டவர்களும் பெரிய மனிதர்களாகவே நடந்து காட்டினார்கள். மொத்தத்தில் ஒரளவு பொதுக்கல்வியும் பெரிய அளவு நாணயமும் கொண்டவர்களே தலைவர்களாக இருந்தார்கள். எனவே, என் வேலையில் தொல்லைகள் மிகவும் குறைவு; உளைச்சல்கள் எப்போதோ சிலவே. ஒழுங்குள்ள சூணாம்பேடு சூணாம்பேடு என்பது அன்று பெரிய ஜமீன். அவ்வூரிலும் ஊர் ஆட்சி மன்றம் இருந்தது. அதை நான் தணிக்கை செய்ய நேர்ந்தது. அவ்வூர் ஜமீன்தார், திரு. அருணாசல முதலியார், தாம்தலைவராக இருப்பதற்குப் பதில் தம் ஜமீன் நிர்வாகியைத் தலைவராக்கி வைத்திருந்தார். அவர் ஜமீந்தாரின் உறவினர் அல்லர்; வேறு பிரிவைச் சேர்ந்தவர். பெரியவர்கள் நிழலில் பணிபுரிவோரில் பலர், பெரிய பாதுகாப்பு இருக்கிறதென்ற அசட்டுத்துணிச்சலில், தவறுகள் செய்வது உண்டு. சூணாம்பேடு ஊராட்சித் தலைவரும் அப்படியிருப்பாரோ என்று அய்யப்பட்டேன். அப்படியிருந்துவிட்டால், எப்படிச் சமாளிப்பது என்ற கவலையோடு அவ்வூர் போய்ச் சேர்ந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/598&oldid=787558" இலிருந்து மீள்விக்கப்பட்டது