பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/618

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 575 வைசிராயின் அறிவிப்பு முறையா? இக்கேள்வியே இந்திய அரசியல் கடலில் கொந்தளிப்பை எழுப்பிற்று. இந்திய மக்களையும் அவர்களுடைய பிரதிநிதியாக அமைச்சு நடத்தியவர்களையும் கலந்துகொண்டு, அவர்களுடைய இசைவைப் பெறாது அப்படி அறிவித்தது முறையல்ல என்பது அனைத்திந்திய காங்கிரசின் நிலை. காங்கிரசின்கட்டளைக்கு ஏற்பப் பல மாநிலங்களிலும் நடைபெற்று வந்த காங்கிரசு அமைச்சரவைகள், பதவிகளிலிருந்து விலகிவிட்டன. மாநிலங்கள் ஆளுநர்கள் ஆட்சிக்கு வந்தன. சென்னை மாகாண ஆளுநர், ஆறாவது முதல் எட்டாவது வகுப்பு வரை கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்ற திட்டத்தை எடுத்து விட்டார். விரும்புகிறவர்கள் மட்டுமே படிக்கலாம்; அதற்கு உதவியாகும் பொருட்டு, ஏற்கெனவே நியமிக்கப்பட்ட இந்தி ஆசிரியர்கள் அவ்வப்பள்ளிகளில் தொடர்ந்து பதவிகளில் இருப்பார்கள் என்பது ஆளுநரின் ஆணை. அம்மாற்றம், தமிழ்ப் பொது மக்களிடையே நிறைவை வளர்த்தது. நீதிக் கட்சியின் பதினாறாவது மாகாண மாநாடு இரண்டு ஆண்டு காலம் கட்டாய இந்தி எதிர்ப்பில் சிக்கியிருந்த நீதிக்கட்சிக்குத் தன் கவனத்தைப் பிற நடவடிக்கைகளின்மேல் திருப்ப முடிந்தது. கட்சியின் 16ஆவது மாகாண மாநாடு திருவாரூரில் கூடியது. நீதிக்கட்சியின் தலைவராக விளங்கிய பெரியார் ஈ.வெ. ராமசாமி தலைமை தாங்கினார். 1940ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 3, 4 தேதிகளில் நடைபெற்ற அம் மாநாட்டிற்குத் திரு. பொலம்பாக்கம் முத்து மல்லாவும் நானும் சென்று வந்தோம். உள்ளாட்சித் துறை ஊழியர்கள்கூட அரசியல் மாநாடுகளில் கலந்து கொள்வது முறையல்ல. இந் நெறி அன்று புரியாததால், மாநாட்டிற்குச் செல்லும் தவறுக்கு ஆளானேன். கூட்டம் பெரிது; பேச்சுகள் சிறந்தன. விருந்தோம்பலைப் பற்றிக் கேட்கத் தேவையில்லை. உணர்வுகள் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடின. முதல் மூன்று முடிவுகள் இரங்கலைத் தெரிவித்தன; எதற்கு? சிலருடைய மறைவுக்கு. நீதிக்கட்சியின் தூண்களில் ஒருவராகவும் தஞ்சை மாவட்ட ஆட்சிக்குழுவின் தலைவராகவும் பல்லாண்டு சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் விளங்கியவர் சர்.ஏ.டி. பன்னிர் செல்வம். அவர் புகழ்பெற்ற செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/618&oldid=787581" இலிருந்து மீள்விக்கப்பட்டது