பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 655 'பள்ளி, பத்து மாதங்களாக நடக்காதது உண்மை. நடப்பதுபோல் நாளை கணக்கு எழுதி அனுப்பிக்கொண்டிருந்தது பொய். ஆசிரியரின் "புரொபேசன் முடியனுமே என்று அப்படிச் செய்தேன். 'எங்களுக்கு உதவ வேண்டுமென்பதற்காக ஆய்வாளரும் வந்து பார்க்காமலே, பார்த்ததுபோல, பதிவுகளை உண்டாக்கிவிட்டார். 'அய்யா வந்து கண்டுபிடித்துவிட்டீர்கள். இனியும் மறைத்துப் பயன் இல்லை. கிணற்றில் பாதாளக்கொளுசைப் போட்டு இழுத்தால், அதில் என்னென்ன வெளியே வருமோ? நான் இன்னும் நான்கு பள்ளிகளைச் செம்மையாகவே நடத்துகிறேன். அவற்றைக் காப்பாற்றிக் கொண்டால் போதும். 'அதனால்தான், நானே உண்மையை எழுதிக்கொடுத்து விட்டேன். பள்ளிக்கு மானியம் வேண்டாமென்றும் எழுதிக் கொடுத்திருக்கிறேன். தயவுசெய்து, அங்கீகாரத்தை எடுத்து விட்டு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மன்னித்து விடுங்கள். எனக்காக மட்டுமல்ல; என்னை நம்பிய ஆய்வாளருக்கும் உதவியாக இருக்கும்' என்று நிர்வாகி மிகவும் பணிவுடன் வேண்டிக் கொண்டார். அவர் பெயர் பசுமையாக நினைவில் இருக்கிறது. ஆனால் வேண்டுமென்றே சொல்லாமல் விடுகிறேன். ஏன்? அவர், பிற்காலத்தில் அதிகமான பொறுப்புகளை மேற்கொண்டு உள்ளார். பயனுள்ளவகையில் செயல்பட்டுள்ளார். நாடு தழுவிய பரிசினைப் பெற்றுள்ளார். அவரைப் பழிப்பானேன்? யாரையும் பழிக்க நான் இவற்றை எழுதவில்லை. இல்லாத பள்ளியின் விவகாரம் எளிதாகத் தீர்வதைப்பற்றி மகிழ்ச்சி கொண்டேன். அப்பள்ளியின் அங்கீகாரத்தை நீக்கிவிடும்படியும், அவ்வாண்டு மானியத்தில் ஒரு காசும் கொடுக்கத் தேவையில்லை என்றும் மாவட்டக் கல்வி அலுவலருக்குப் பரிந்துரைத்தேன். அப்படியே ஆணை வந்துவிட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நிர்வாகி வளர்ந்துள்ளதைக் கேள்விப்பட்டேன். ஒரு படிப்பினை மின்னிற்று. அது என்ன? 'தன்னெஞ்சறிவது பொய்யற்க', 'யானைக்கும் அடிசறுக்கும் எப்படியோ, செய்த தவறு தெரிந்துவிடும்போது, சூழ்ச்சித்திறனை நம்பாது, நேர்மையின் வலிமையை நம்பி, தவறை உளமார ஒப்புக் கொள்ளுவதே எதிர்கால வளர்ச்சிக்குப் பெரும் துணை. அந்தப் போக்கே அவரை, வளர்த்து இருப்பதாகப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/698&oldid=787686" இலிருந்து மீள்விக்கப்பட்டது