பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/724

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 683 அத்தேர்ச்சி, பிற்காலத்தில், நானே மாவட்டக் கல்வி அலுவலகராகச் செயல்பட்டபோது, பெரிதும் துணைநின்றது. கல்வித்துறை ஆண்டுதோறும் சேகரித்து வெளியிட வேண்டிய புள்ளி விவரப் பட்டியல்கள் பலவாகும். அவற்றிற்கான அடிப்படைத் தகவல்களை ஒவ்வோர் பள்ளியிலிருந்தும் ஆய்வாளர்கள் பெறுவார்கள். அத்தனையையும் கூட்டிப்போட்டு மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்புவார்கள். L. பல வட்டாரங்களில் இருந்து வரும் பட்டியல்களைச் சேர்த்து, முறையாக மாவட்டப் பட்டியல்களை ஆயத்தஞ் செய்யவேண்டும். அன்று இருந்த இருபத்து நான்கு மாவட்டக்கல்வி அலுவலர்களும் அனுப்பும் பட்டியல்களை இணைத்து மாகாணப் பட்டியல்கள் கல்வி இயக்கத்தில் ஆயத்தம் செய்யப்படும். மாவட்ட நிலையில் பட்டியல்கள் போட்டுத்தர அழைக்கப்பட்ட அய்ந்தாறு ஆய்வாளர்களில், நானும் ஒருவனாக இருந்தது நல்லதாயிற்று. அந்தப் பயிற்சி, பிற்காலத்தில் உதவும் என்பது அப்போதைக்குத் தெரியாது. ஆனால், முப்பது நாற்பது நாள்கள்வரை, காலை பத்து மணிக்கே தொடங்கி, மாலை ஆறு ஆறரை மணிவரை கூட்டல் கணக்கிலேயே மூழ்கியிருந்ததால் பகல் முழுதும் என் மனைவியின் பிரிவைப் பற்றி நினைக்கவே நேரமில்லை. அது என்னைக் காப்பாற்றியது. தொல்லையான அவ்வேலை நன்மையான நல்ல பழக்கத்தை என்னிடம் ஏற்படுத்திவிட்டது. அலுவலில் மூழ்கி, கவலையை மறக்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டது. திட்ட்மிடாது ஏற்பட்ட அப்பழக்கம் அல்லவா, பயங்கரமான சோகக் கடலிலேயே மிதக்கும் என்னை, பல ஆண்டுகளாக வாழவைத்து வருகிறது. துன்பம் சூழ்கையில் ஏடு எடுத்து எழுதித் தப்பிப் பிழைத்தும் நடமாடுகிறேன். எதன்பொருட்டு? எவருக்காக? எனக்குப் புரியவில்லை. பட்டறிவின் பலன் பன்னிரண்டு ஆண்டுகள் பறந்த பிறகு, திரு கோவிந்தராஜுலு பொதுக்கல்வி இயக்குநராக விளங்கினார். அவ்வேளை, திரு. டாக்டர் எம்.வி. கிருஷ்ணராவ் அவர்கள் கல்வி அமைச்சர். அப்போது சட்டமன்றத்தில் குறுகிய அறிவிப்புக் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் சொல்லுவதற்கான, புள்ளி விவரங்களை அமைச்சர் இயக்குநரிடம் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/724&oldid=787723" இலிருந்து மீள்விக்கப்பட்டது