பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/746

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடது-சுந்தரவடிவேலு 705 அந்த நிதியைத் தேடுவது அவர் பொறுப்பு: வாலாஜாபாத் வரை போக மாட் டுவண்டியே சாதனம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்வது பம் அவர் வேலை. காலை மூன்று மணிக்கே, வெந்நீர் போட்டு, என்னை எழுப்பி, குளிக்க வைப்பது தாயின் பணி. நேரத்தில் இட்டிலி அவித்து, உண்ண வைத்து, வழியனுபபுவது அம்மாவின் அன்புப் பொறுப்பு. குறிப்பறிந்து, எனக்கு வேண்டியதை நேரத்தில், செல்லமாகச் செய்து கொடுப்பதால், நான், மெல்ல மெல்லக் கேட்கும் குணத்தையே இழந்துவிடுவேன் என்பதை அந்நல்லோர் அறியார். பிள்ளைத்தனத்தில் இருந்த எனக்கு இது தெரியாமற் போனது வியப்பல்ல. நான் கேட்காதிருப்பது, ஆணவத்தால் என்று பலரும் நினைப்பது அவர்களுடைய குறையல்ல. நான் கேட்கத் தெரியாதவன் என்பதை என் அருமை 'அண்ணன்' சா. குருசாமி (குத்துாசி) அவர்கள் நன்கு புரிந்து கொண்டவர்கள். நான் காந்தம்மாவைத் திருமணம் செய்துகொண்ட பிறகு, என் பெற்றோர் ஆற்றிய பணியை, காந்தம்மாவின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். 'இது இல்லையே; அது இல்லையே' என்று நான் புழுங்க, எனக்குச் சிறிதும் வாய்ப்பே வைக்கவில்லை. தீபாவளிக்கு இவை இவை; பொங்கலுக்கு இன்னவை தேவை' என்று வரிவிதிக்காத அப்பாவி மாப்பிள்ளையை, அவர்கள் கண்னெனக் காத்தனர். அவர்களுக்கு அவ்வளவு வசதி ஏது? குருசாமியும் அவரது வாழ்க்கைத் துணைவி, குஞ்சிதமும் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் தனிக் குடித்தனம் பண்ணவில்லை. குஞ்சிதத்தின் பெற்றோரோடு, ஒரே குடும்பமாக வாழ்ந்தார்கள். மகளும் மருமகனும் பெற்று வந்த ஊதியம் தனிக் கணக்கில் போகாது; தனிப்பெட்டிக்குள் பதுங்காது. குடும்பச் செலவுக்காகப் பொதுக் கணக்கில் சேர்ந்துவிடும். பின்னர், அக்கூட்டுக் குடும்பத்தில் நானும் ஒருவனாகச் சேர்ந்து விட்டேன். அப்போது, பல திங்கள்வரை, நான் ஒருவனே ஊதியம் பெற்று வந்தேன். மூவர் ஊதியத்தில் என்னுடையதே மிகவும் குறைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/746&oldid=787747" இலிருந்து மீள்விக்கப்பட்டது