பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/757

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71.6 நினைவு அலைகள் அப்பண்பு அன்றே என் மூச்சாகிவிட்டது. அது எப்படி? அதற்குள்ளேயே, நான் முதிர்ந்த சமத்துவவாதியாகி, வளர்ந்து விட்டேன். பாதுகாப்பு அணியில் சேருவதற்கு முன்பு நான் ஆற்றிய உரைகளோ, பெரும்பாலும் ஆசிரியர்களின் நடுவில். அவர்கள் எதிர்பார்ப்பது எதை? தங்கு தடையற்ற பேச்சை நான் பல தலைசிறந்த பேச்சாளர்களின் உரைகளைக் கேட்டதால், என்னாலும் திணறாமல் பேச முடிந்தது. தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும்படி, பொதுமக்களைப் பக்குவப்படுத்தவும் பள்ளிச் சிறுவர் சிறுமியர்களைப் பக்குவப் படுத்தவும் அருவிபோல் சொற்களைக் கொட்டுவது பயன் தராது என்பது வெளிப்படை. புதிய பாணி ஆகவே, என்பேச்சில் மாற்றுமுறைகாணவேண்டியதேவை ஏற்பட்டது. அந்த நெருக்கடியில், புதுப்பாணி ஒன்றைக் கையாண்டேன். சிறுசிறு சொற்களைக் கொண்டே - சிற்றொடர்களைக் கொண்டே கேள்வி கேட்டல்; பதில்களை வரவழைத்தல். பிற பிள்ளைகளிடம் வேறு பதில்களைத் துண்டுதல். அவற்றில் எது சிறந்தது என்பதை அவர்களே உணரச் செய்தல். இப்படிக் கேள்வி பதில்கள் வாயிலாக வலியுறுத்த வேண்டிய வழிமுறைகளை மாணாக்கர் உள்ளங்களில் வைத்தல். இத்தகைய கலந்து உரையாடல் பாணியை வெள்ளோட்டம் பார்த்தேன். சிறுவர்கள் புரிந்து கொள்வது, நிறைவு கொள்வது, தெரிந்தது. அந்த முறையில் தொடர்ந்தேன். சென்னை மாநகர இளங் குருத்துகளின் உள்ளங்களைக் கவர்ந்தேன். பொதுமக்கள் என்னைப் பற்றிப் பேசத் தலைப்பட்டார்கள். என் உரைகளை மிக ஆவலுடன் கேட்க வந்தார்கள். அப்படியா அப்போதே பொதுமக்களிடம் பேசும் வாய்ப்புகள் கிட்டினவா என்று வியக்காதீர்கள். போர் ஆதரவுக் GԾCԿ9 அக்காலத்தில் ஒவ்வோர் நகரிலும் மாவட்டத்திலும்' போர் ஆதரவுக் குழு அமைக்கப்பட்டது. அவற்றின் சார்பில், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. பிரிட்டானியக் கூட்டணியினர் போரில் ஏன் வெற்றிபெற வேண்டும் என்று விளக்கப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/757&oldid=787759" இலிருந்து மீள்விக்கப்பட்டது