பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 OG நினைவு அலைக.I

தியாகராயபிள்ளை இறந்த அறையிலேயே, தங்க நேரிட்டதைப் பற்றி எப்படியோ இருந்தது.

என் முகம் வாடியதைக் கவனித்த தலைமை எழுத்தர், அடுத்த கணமே வேறொரு செய்தியைச் சொல்லி என் சிந்தனையைத் திசை திருப்பினார்.

‘சேலம் மாவட்ட மருத்துவ அலுவலர் அருகில் குடியிருக்கிறார் அன்று இரவு தியாகராய பிள்ளை, நெஞ்சு வலி என்று சொன்னதும். கடைநிலை ஊழியர் பழனி, விரைந்து சென்று அவரை அழைத்து வந்தார்.

‘அந்த இரண்டு மூன்று மணித்துளிக்குள் உயிர் போய்விட் து மருத்துவம் பார்க்க வாய்ப்பே கிடைக்கவில்லை.

‘தியாகராய பிள்ளையின் இறுதிப் பயணத்தின் போது, அவது சடலத்தை எடுத்துச் சென்ற நால்வரில் அந்த மருத்துவ அலுவலரும் ஒருவர்.

‘தொடக்கத்தில் தோள் கொடுத்த போது, மரியாதை செய்கிறா என்று நினைத்தோம். பத்து அடி நடந்த பின், உறவினர் ஒருவர் கே. கொடுக்க அவருக்கு உதவ முன் வந்தார்.

‘டாக்டர் பி. அனுமந்தராவோ, உடன்படவில்லை. இறுதிவயை இரண்டு கல் தொலைவு தூரம் தாமும் தாங்கிக்கொண்டு சென்றார் அப்படிப்பட்ட புண்ணியவான்களும் வாழ்வதால்தான் மழை பெய்கிறது’ என்று அவர் கூறியதைக் கேட்டு உருகிப் போனேன்.

15. திரு. வி. கலியாணசுந்தரனார்

புதிதாகச் சேர்ந்திருக்கும் மாவட்டக் கல்வி அலுவலரான என்னைக் காணப் பலர் வந்தனர்.

அவர்களில் ஒருவர் டாக்டர் அனுமந்தராவ். தியாகராயபிள்ளையின் உடலைத்துாக்கிச் சென்ற நிகழ்ச்சியை நெஞ்சுருக நினைவுபடுத்தினார்

‘அய்யா! டாக்டர் அனுமந்தராவ் மராட்டியப் பார்ப்பனரல்லாதவர். இங்கே மருத்துவப்பட்டம் பெற்ற தோடு நில்லாமல், சீமைக்குச் சென்று பட்டம் பெற்றவர். மருத்துவத் துறையில் பணி முப்பு உடையவர். அய்ம்பது வயதை நெருங்கிக்கொண்டு இருப்பவர்.

‘அது மட்டுமா? சென்னையில் புகழ் பெற்ற குடும்பத்.ை சேர்ந்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/122&oldid=622984" இலிருந்து மீள்விக்கப்பட்டது