பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து. சுந்தரவடிவேலு 113

அப்போது ஏற்பட்ட உள் உணர்வு திரு.வி.க.வை. கடலூரில் நடந்த |யாவிட நாட்டுப் பிரிவினை மாநாட்டில், மாநாட்டாளர் அழைப்பின் பேரில், கலந்து கொள்ளச் செய்தது.

திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவு

பத்தாண்டுகளில் திராவிடநாடு, தனி ஆட்சியாகிவிடும் என்று 1918-இல் ஈரோட்டில் நடந்த மாநாட்டில் திரு.வி. கலியான சுந்தரனார் முழங்கினார்.

சரியாகவோ, தவ்றாகவோ ஈ.வெ.ராவும் திரு.வி.க.வும் திராவிட நாடு கிடைத்தால் சாதி அற்ற சமுதாய் வாழ்க்கை முறைக்கு சாத்தியக்கூறும், வாய்ப்பும் அதிகம்’ என்று நம்பினார்கள்.

இறை நம்பிக்கையுடைய திரு.வி.க. இறையின் பெயரால் சாதி வற்றத்தாழ்வுகளை நடைமுறைப் படுத்துவதை எதிர்த்தார். ஏழ்மையை ரியாயப்படுத்துவதைக் கடிந்தார். சாதியற்ற, சமதர்ம ஆட்சியை | ருவாக்கத் துடித்தார்.

‘தன்மான இயக்கத்தின் தாய், நான்; தந்தை, பெரியார்; அது பிறந்தது முதல் தந்தையின் வீட்டிலேயே வளர்ந்து வருகிறது’ என்று முழங்கியதன் வாயிலாக, திரு.வி.க. சாதிக் கலைப்பிற்கும் சமதர்மத்திற்கும் தமது உடன்பாட்டைத் தெரிவித்துக்கொண்டார் எனலாம்.

அய்ம்பத்து அய்ந்து நூல்களை எழுதி வெளியிட்ட பெருமை திரு.வி.க.வுக்கு உரியதாகும். போதிய அளவு அவற்றைப் படித்துத் தெளிவு பெறாத குறை மக்களுக்கு உரியதாகும்.

நம் வாழ்க்கை முறையில்; அதன் நடைமுறையில் மற்றோர் குறை நினைவுக்கு வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, அண்ணா மலை நகரில் ஒரு அதிர்ச்சியான நிகழ்ச்சி.

அங்கு, தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த டாக்டர் ()ாமலிங்கம் மாரடைப்பால் நொடியில் மறைந்தார்.

அவரது துணைவி, சிவயோகவல்லி - திரு.வி.க.வின் பேத்தி அப்போது அங்கு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணுக்குத் தாய்.

கணவனை இழந்த அதிர்ச்சியில் அச் சூழலை விட்டு வெளிவர

முயன்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/129&oldid=623020" இலிருந்து மீள்விக்கப்பட்டது