பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,ெ து. சுந்தரவடிவேலு - 115

-

| அப்போதும் அதற்குப் பிறகு பல்லாண்டும் சென்னை ாகாணத்தில், சேலம் நகர் மன்றம் ஒரு கல்லூரியை நடத்தி வந்தது.

அது இரண்டாம் நிலைக்கல்லூரி; அதாவது இளங்கலைப் பட்டப் படிப்பிற்கு ஏற்பாடு செய்யாமல் இண்டர் மீடியட் வரை பாடம் சொல்லிக் கொடுத்து வந்தது.

1927 இல் சேலம் கல்லூரி முதல்வர் பதவி காலி ஆயிற்று. அப்போது, சேலம் நகர் மன்றத் தலைவர் திரு. தம்மண்ணச் செட்டியார். அவர் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்.

எனவே, பார்ப்பனரல்லாதவர் ஒருவரை முதல்வராக நியமிக்க விரும்பினார்.

அவர் நினைத்தபடி தக்கவர் கிடைத்தார். அவரே திரு. இராமசாமி கவுண்டர்; அவரது பின்னணி என்ன? ம யர் கல்வியின்பால், தமிழர்களுக்கு நாட்டமில்லாத காலத்தில், 1000 ஆம் ஆண்டில் இராமசாமி பிறந்தார்.

எனினும் தமிழ் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக வளர்ந்தார். போதிய அக்கறையோடு படித்தால் எல்லோருக்கும் படிப்பு - உயர் படிப்பு வரும் என்பதை மெய்ப்பித்தார்; எம்.ஏ. பட்டம் பெற்றார்.

முதல் பட்டதாரி

வடஆர்க்காடு மாவட்டத்தில் பார்ப்பனரல்லாதாரில் இவரே முதல் எம்.ஏ. பட்டம் பெற்றவர்.

என்ன பாடத்தில் கணக்குப் பாடத்தில்; பார்ப்பனர் அல்லாதவர்களுக்குக் கணக்கு வராது. என்பது பல மூட நம்பிக்கைகளில் ஒன்று. அதை உடைத்துக் காட்டினார் இராமசாமி கவுண்டர்.

அப்போது வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி தொடக்க நிலையில் இருந்தது. அதுவும் இரண்டாம் நிலைக் கல்லூரியே.

அந்தக் கல்லூரியில் மூன்றாண்டு பணிபுரிந்தார். கல்லூரி நிர்வாகம் அவர் திறமையைக் கண்டு போற்றியது.

அக்காலத்தில் எல்லாக் கல்லூரிப் பேராசிரியர்களும் எல். டி. என்கிற அ.பிெயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வனவே, வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி நிர்வாகத்தினரே, அவரைச் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அறுப்பினர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/131&oldid=623023" இலிருந்து மீள்விக்கப்பட்டது