பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 121

தமிழக சட்டமன்றப் பேரவைத் தலைவர், திரு.க. இராசாராம் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. வி.சி. குழந்தை சாமி, ஸ்தபதி கணபதி, உயர்நீதி மன்ற நடுவர், திரு.சி. நடராசன் ஆகியோர் முதல்வர் இராமசாமி கவுண்டரின் காலத்தில், சேலம் கல்லூரியில் கற்றுத் தேறியவர்கள் ஆவர்.

எண்ணற்ற இளைஞர்களைப் பெரியவர்களாக்கிய அந்நல்லார், தாம் தலைமை ஏற்று நடத்திய கல்லூரியையும் உயர்த்தி விட்டார்.

இரத்தினசாமிப் பிள்ளை.

இரண்டாம் நிலைக் கல்லூரியாக இருந்ததை முதல்தரக் கல்லூரியாக்க, வேர்களாக அமைந்தவர்கள் இருவர்.

ஒருவர், முதல்வர் இராமசாமி கவுண்டர். மற்றொருவர் சேலம் நகர் மன்றத் தலைவர் திரு. இரத்தினசாமிப் பிள்ளை என்னும் அறிஞர்.

17. தீமை உருவாயிற்று

திரு. இரத்தினசாமிப் பிள்ளை, தம்காலில் நின்று, தம் உழைப்பால் வளர்ந்தவர். முறையான படிப்பு சிறிதே ஆயினும் உலகியல் பட்டறிவில் முதிர்ந்திருந்தார்.

சுவர்ணாம்பிகை பேருந்துத் தொடர்களுக்கு முதலாளியானவர். கையில் காசும், சுற்றி ஆள் பலமும் சேர்ந்த பிறகு பொது வாழ்க்கைக்கு வந்தார்.

பொது வாழ்க்கையில் இருந்து ஆதாயம் தேடும் நிலைக்குத் தம்மைத் நள்ளிக் கொள்ளாமல் வாழ்ந்தார்.

நான், சேலம் மாவட்டக்கல்வி அலுவலராகச் சேர்ந்தபோது, திரு. முயத்தினசாமிப் பிள்ளை சேலம் நகர் மன்றத் தலைவராக இருந்தார்.

மாவட்ட ஆட்சிக்குழுவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

கண்காட்சி வரும்படியில் கல்விச் சீரமைப்பு

சேலம் நகரில் அம்மன் திருவிழா ஒன்று தடபுடலாக நடக்கும். ஆண்டுதோறும் நடக்கும் அத் திருவிழாவின் போது, சேலம் நகர் மன்றம் கண்காட்சி ஒன்றை நடத்தி வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/137&oldid=623029" இலிருந்து மீள்விக்கப்பட்டது