பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நினைவு அலைகள்

‘நீங்கள் இருவரும் கண்டு பேசிவிட்டால், தவறான மதிப்பீடு சீராகிவிடும் என்று நினைத்தேன். நான் நினைத்தது சரியாகி விட்டது . என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சின்னய்யாக்கள் தேவை

இது சிறிய நிகழ்ச்சி; அதில் புதைந்திருக்கும் பாடம் பெரிது.

சரியாகவோ, தவறாகவோ, இருவருக்குள், ஒருவரைப்பற்றி ஒருவர் புரிந்து கொள்ளாமல் போகலாம்.

அப்படிச்சிறு கீறல் ஏற்பட்டால், அதைக்கொண்டு பெரிய பகையை வளர்ப்பவர்கள் ஒரு வகையினர்.

பெரிய கசப்பு முளைத்தாலும் உரியவர்களை அழைத்து வைத்தோ, அவர்களிடம் தூது சென்றோ, இருவரிடையே ஒற்றுமையை ஏற்படுத்து வோர் மற்றோர் வகையினர்.

எந்தச் சமுதாயத்தில் பகைப்படுத்திக் கலகமூட்டுவோர் அதிகமோ, அச் சமுதாயம் சாண் ஏறினால் முழம் சறுக்கும்.

எந்தச் சமுதாயத்தில் மன்னிப்பைப் பயிரிட்டு, ஒற்றுமையை வளர்க்கும் அறவோர் பெருகியுள்ளனரோ, அந்தச் சமுதாயம் இடர்களை, புறங்கூறல்களை, முதுகில் குத்துதலைச் சமாளித்து முன்னேறிக் கொண்டிருக்கும்.

திரு. சின்னய்யா வைதீகர், சாதிக் கலைப்பில் முனைப்புக் காட்டாதவர்.

இருப்பினும் என்னைப்பற்றி, எவரும் வீணாகத் தப்பெண்னம் கொண்டு, பகைமை பாராட்டக்கூடாது என்ற பெரிய மனம் படைத்தவராக, பண்பாளராக நடந்து காட்டினார்.

அவர், ‘காலத்தினாற் செய்த சிறிய உதவி, ஞாலத்தின் பெரிதாகப் பயன்பட்டது. எனக்கும் நாச்சியப்பருக்கும் இடையே ஆழமான நட்பை வளர்த்தது.

நம் சமுதாயத்தில் திரு. சின்னய்யா போன்று, பூசல்களைத் தீர்த்துவைக்கும் நல்லோர் மிக மிகச் சிலரே.

‘நமக்கென்ன வந்தது ‘ என்ற நழுவி விடுவோர் பலர்; காதும் மூக்கும் வைத்து மிகைப்படுத்தி, புறங்கூறி, கலகமூட்டிப். பிழைப்போர், மகிழ்வோர் மிகப்பலர் ஆவார்.

இந்த நிலையில் மாற்றம் இல்லையா?

இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/146&oldid=623039" இலிருந்து மீள்விக்கப்பட்டது