பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 1 25

வந்த மறுநாளே, நாச்சியப்பரைக் காண முயன்றதைச் சொன்னேன். அவரது அலுவலகத்தார், ஏனோ தானோ என்று பிடி கொடுக்காமல் பதில் கூறியதைக் கூறினேன்.

நாமக்கல், ராசிபுரம், மேட்டுர், தர்மபுரி, ஆத்துார் எனப் பல வளர்களுக்கு நான் செல்ல வேண்டி இருந்ததைச் சொல்லத் தொடங்கினேன்.

அங்கு நடத்திய நிகழ்ச்சிகளில், ஆங்காங்கே உள்ள பள்ளிக் கட்டடங்களின் நிலைபற்றிப் பேச்சுத் தொடர்ந்தது.

நான் ஓரூர் பயணத்தைச் சொல்லி முடிப்பதற்கு முன் நாச்சியப்பர், என் அடுத்த ஊர்ப் பயணத்தையும் நிகழ்ச்சியையும் பற்றித் தகவல் கொடுத்தார்.

அரசின் புலனாய்வுத் துறை கூட அவ்வளவு விழிப்பாகவும், விரைந்தும், விரிவாகவும் தகவல் கொடுக்காது.

அவ்வளவு தகவல்களை அவர் தெரிந்து வைத்து இருந்தார்.

ஒரு மணி நேரம்போல் மனந்திறந்து உரையாடினோம். தெளிவு பிறந்தது பிறகு நாச்சியப்பர்,

‘நீங்கள் சுறுசுறுப்பாகச் சுற்றி வந்து பல பள்ளிகளைப் பார்த்து வந்ததையும், ஆங்காங்கே மாணவர் கூட்டங்களில் பேசி, கல்வியின் பால் நாட்டத்தைத் திருப்புவதைப் பற்றியும் பலரும் சொல்லக்கேட்டு மகிழ்ந்தேன்.

‘என்னை மதித்து வந்து பார்க்கவில்லை என்பதை நண்பர் ஒருவர், நான்கு பேர்களுக்கு முன், சுட்டிக்காட்டியபோது, என் உள்ளம் புண் பட்டது.

‘இதுவரை உங்கள் மேல் வெகுளி பொங்கியபடியே இருந்தது. ப்ெபோது அது எவ்வளவு பெரிய தவறு என்பதை நான் நன்கு உணர்கிறேன்.

‘மாவட்டப் பள்ளி ஆண்டு விழாக்களில் சிலவற்றிற்கு உங்களை அழைப்பார்கள். அவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள். நானும் கலந்து கொள்கிறேன்; இருவரும் சேர்ந்து போவோம்’ என்று நாச்சியப்பர் முடித்தார்.

அப்போதுதான், திரு. சின்னய்யா அவர்கள் மகிழ்ச்சியுடன் பபசினார்.

‘இரு நல்லவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமலே காழ்ப்புக் கொள்வது பல முறை நிகழக் கண்டிருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/145&oldid=623038" இலிருந்து மீள்விக்கப்பட்டது