பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து. சுந்தரவடிவேலு 141

‘lங்கள் உங்கள் உரிமைகளைப் பற்றிப் பேசுங்கள்; வேண்டிய சலுகைகளைக் கேளுங்கள். முடிந்த அளவு தருகிறோம். கல்வி பற்றிய மற்ற விவகாரங்களில் சும்மா இருங்கள் என்று கூறும் குறுகிய கண்படைத்தவர்கள், ஆங்கிலேய ஆட்சியாளர்களில் இல்லை; அக்கால அமைச்சில் இல்லை; அதிகாரிகளிலும் இல்லை.

மாகாணம் முழுமைக்கும் தென்னிந்திய ஆசிரியர் ஒன்றியம் டிருந்ததே போன்று மாவட்டந்தோறும் ‘ஆசிரியர் கழகம்’, ‘டீச்சர்ஸ் விஸ்டு இருந்தது. சேய்களாகிய அவை, தாயின் பாணியில் மிகச் பிறப்பாகச் செயல்பட்டன.

தமிழா? ஆங்கிலமா?

1914 ஆம் ஆண்டு, மே திங்கள், சேலம் மாவட்ட ஆசிரியர் கழகம்’ வழக்கமான ஆண்டு மாநாட்டை நடத்தியது.

திருச்சி தேசியக் கல்லூரி, ஆங்கிலப் பேராசிரியர் திரு. இராமய்யர் தலைமை ஏற்றார். புதிதாக வந்த அலுவலராகிய என்னை மாநாட்டைத் தொடங்கி வைக்க அழைத்தார்கள். கடமை பற்றி அந்த அழைப்பை வ|றக் கொண்டேன்.

வரவேற்புரை ஆங்கிலத்தில்; தலைமை ஏற்கவேண்டிக் கொள்ளல் ஆங்கிலத்தில்; வாழ்த்துச் செய்திகள் ஆங்கிலத்தில். -

பிறகு, மாநாட்டைத் தொடங்கி வைக்க அழைக்கப்பட்டேன்.

நான் தமிழில் தொடங்கினேன்; தமிழில் தொடர்ந்து உரை ஆற்றினேன்; தமிழிலேயே முடித்தேன்.

நாற்பத்து ஐந்து மணித்துளிகளைக் கொள்ளை கொண்ட என் _ாயில், ஆங்கிலச் சொல் ஒன்றுகூட நுழையவில்லை. தமிழ் என்ற பெயரால், மணிப்பிரவாளம் கூத்தாடவில்லை.

அவையோரில் நூற்றுக்கு எண்பது பேர்களுக்கு மகிழ்ச்சி பொங்கிற்று; மற்றவர்களுக்கு ஏமாற்றம்; எரிச்சல் ஏதோ தீட்டுப் பட்டுப்போன உணர்வு; இதற்கு நான் என்ன செய்ய?

ருெ. வி. கலியான சுந்தரனாரின் உரைகளையும் நூல்களையும் அ.முந்து படித்ததால் நான் பெற்ற பலன் அது.

பகல் உணவு வேளை சேலம் கல்லூரி முதல்வர் இராமசாமி

_வுண்டரின் மைத்துனர் திரு. அருணாசலம் என்பவர் வேறு இரு

ஆசிரியர்களோடு என்னிடம் தூது வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/157&oldid=623051" இலிருந்து மீள்விக்கப்பட்டது