பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 நினைவு . அலைகள்

‘கொங்கு நாட்டவர்கள் சூது வாது தெரியாதவர்கள்; சற்று முன் கோபிகள்; நெற்றியில் உட்காரும் ஈக்குப் புத்தி புகட்ட நெற்றியைக்கூ வெட்டிவிடுவார்கள்’ என்று சிலர் சொல்லிக் கேள்விப்பட்டது உண்டு.

முந்திய பாதி உண்மை என்பதை அந்த நிகழ்ச்சி மெய்ப்பித்து விட்டது. அவ் விளைஞர், ஏதும் அறியாதவர்போல, நழுவி இருக்கலாம். பிற பகுதி தமிழர்கள் அவ்வளவு சாமர்த்தியமாக நடந்து கொண்டு இருப்பார்கள்.

அந்த வெள்ளை உள்ளம் இக் காலத்திலும் கொங்கு நாட்டப் செல்வமாக விளங்குமென்று நம்புகிறேன்.

தென்னிந்திய ஆசிரியர் ஒன்றியம்

அந்தக்காலத்தில், சென்னை மாகாண ஆசிரியர்கள், தென்னிந்திய ஆசிரியர் ஒன்றியம்’ என்ற அமைப்பின் கீழ், சிறப்பாக இயங் . வந்தார்கள்.

அவ் வமைப்பு, ஆசிரியர்களின் உரிமை பற்றி மட்டும் பேசவில்.ை அவர்கள் சரியானபடி கடமை ஆற்றவேண்டும் என்பதுை. அவ்வப்போது நினைவு படுத்தத் தவறியது இல்லை. அதற்கும் சிறப்பாக வழி காட்டிற்று.

அது ஆசிரியர்களுக்குத் தொழிற் சங்கமாக இயங்கிய அளவு, அதே ஆர்வத்தோடு, கல்விக் காவலர் நிலையமாகவும் செயல் பட்டது.

பாடத் திட்டங்களில் எவற்றைச் சேர்க்கலாம்? எவ்வளவு சேர்க்கலாம்?

அவற்றை எந்தெந்த முறைகளில் கற்பிக்கலாம்? அவற்றிற்கு, எத்தகைய சூழ்நிலை தேவை?

என்னென்ன துணைக் கருவிகள் வேண்டும் பள்ளிக்கூடங்கள் எத்தனை நாள்கள் வேலை செய்யலாம்?

இத்தகையவை பற்றி அந்த அமைப்பு கருத்துத் தெரிவிக்கும்: தக்காரைக் கொண்டு ஆலோசிக்க வைத்த பின் தெரிவிக்கும்; தாம் தெரிவித்த கருத்தைச் செயல்படுத்தவும் முற்படும்.

எனவே, ஆசிரியர் ஒன்றியம் பெரிதும் தன்னலம் இல்லாத கல்வி வல்லுநர் அணியாகச் செயல்பட்டது.

பிற்காலத்தில் முதல் அமைச்சர் இராஜாஜி குலக்கல் , திட்டத்தைக் கொண்டு வந்தபோது இந்த அமைப்பு, நாடறிய அ.ை கண்டித்து பின்னர் வேலை நாள்களை அதிகப்படுத்தும் ஆலோசனையை எதிர்த்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/156&oldid=623050" இலிருந்து மீள்விக்கப்பட்டது