பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து சுந்தரவடிவேலு - 151

நான் சேலத்தில் அலுவல் பார்த்தபோது, இன்றைய தருமபுரி மாவட்டம் சேலத்தோடு இணைந்திருக்கிறது; ஒரே சேலம் மாவட்டமாக இருந்தது.

அப்போது, தருமபுரியில் ஒர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி நடந்து வந்தது. அது மாவட்ட ஆட்சிக் குழு நடத்தியது.

அதன் தலைமை ஆசிரியர், திரு நாராயணசாமி அய்யர். இப்போது சட்டமன்றப் பேரவைத் தலைவராக விளங்கும் மாண்புமிகு க. இராசாராம் அப்போது, மாணவ மன்றச் செயலாளராக டிருந்தார்.

இவர், தலைமை ஆசிரியரின் ஒப்புதலோடு, தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியை உயர்நிலைப் பள்ளி மாணவர் மன்றக் கூட்டத்தில் _ரையாற்றும்படி அழைத்தார்.

பெரியார், அழைப்பை ஏற்றுக்கொண்டார். நாளும் நேரமும் குறிப்பிட்டார். அழைப்பினை அச்சிட்டுப் பலருக்கும் அனுப்பினர்; எனக்கும் வந்தது.

அழைப்பைக் கண்டதும் சிறிது கலக்கம் கொண்டேன். நான்தான் பெரியாரை அழைப்பதற்குத் துண்டுகோலாக இருந்தேன் என்று கதை கட்டி விட்டால், என்ன செய்வது? உண்மையை மெய்ப்பிப்பது ாப்படி?

காங்கிரசுக்காரர்களைவிட, என்னைத் தொலைத்துவிடுகிறேன் ான்று சேலத்தில் சூளுரைத்துவிட்டுப் போனவரைப் பற்றியே அருசினேன். o

காந்தம்மா தேற்றினார். ‘நீங்கள் தூண்டுகோல் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். பெரியாரைத் தடுத்து நிறுத்த உங்களுக்கு உரிமையோ, தகுதியோ வில்லை. வலிய வரும் தொல்லை, வந்ததுபோல் தானாகத் தொலையும். கவலைப்படாது அலுவலைப் பாருங்கள் என்று பதற்றினார். -

சில நாள்கள் சென்றன. திரு நாச்சியப்பரும் நானும் ஒரு பள்ளிக்கூட நிகழ்ச்சியில் பங்கு கொண்டோம். என்னைக் கண்டதும்,

‘சில நாள்களுக்கு முன்பு ஒரு தர்ம சங்கடமான நிகழ்ச்சி நடந்தது. _ங்களுக்கு வீண்பழி வந்துவிடுமோ, என்று எண்ணினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/167&oldid=623062" இலிருந்து மீள்விக்கப்பட்டது