பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 நினைவு அலைகள்

கவனச் சிதைவிற்கு இடம் கொடாமல் கற்பதில் மட்டுமே கவனமாக இருந்தால் அல்லவா, அத்தகையோர் கல்வியில் தரம் பெற முடியும்?

சில ஆண்டுகளுக்குக்கூடக் கட்டுப்படக் கற்றுக் கொள்ளாவிட்டால், பிற்காலத்தில் பல்லாண்டுகளுக்குத் தங்கள் கீழே வேலை செய்பவர் களைக் கட்டுப்படுத்தி, வேலை வாங்கும் ஆளுமை வளராதே!.

மாணவப் பருவம் இரண்டுங்கெட்டான் பருவம். பாம்பு ஒடுகிறது என்றால், இதோ மிதித்துக் கொன்றுவிட்டு வருகிறேன் என்று துரத்திக்கொண்டு ஒடுகிற பருவம். *

அவர்களை நெறிப்படுத்த வேண்டியவர் எவர்? நாட்டின் தலைவர்கள்.

அவர்கள் நேர் வழிகாட்டத் தவறிவிட்டார்களா? இல்லை.

காந்தி வழி

இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு கூறாக, ஆங்கில ஆட்சியின் முத்திரை பெற்ற கல்வி நிலையங்களுக்குப் போக வேண்டாம் என்றார், அண்ணல் காந்தி அடிகள். -

அந்த அளவு பத்திய மிருக்க இயலாது, கல்வி நிலையங்களில் சேர்ந்து இருந்தவர்களுக்கு, தேசத் தலைவர் காந்தி அடிகள் காட்டிய நெறி என்ன?

‘கல்வி நிலையங்களின் கட்டுப்பாட்டிற்கு அடங்கி நடவுங்கள் என்பதே.

நம் நாட்டின் தந்தை காட்டிய கட்டுப்பாட்டு நெறியையே, உலகின் முதல் சமதர்ம நாட்டை உருவாக்கிய மாவீரர் லெனின், சோவியத் நாட்டு இளைஞர்களுக்குக் காட்டினார்.

‘படியுங்கள்! படியுங்கள்! மேலும் படியுங்கள்’ என்பது புரட்சித் தலைவர் லெனின் சோவியத் இளைஞர்களுக்குக் காட்டிய வழி ஆகும்.

அண்ணா கருத்தை இந்திய அரசு ஏற்றது

பேரறிஞர் அண்ணாதுறை சென்னை சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக விளங்கியபோது அம்மன்றப் பேரவை வாயிலாக, இந்திய முழுமைக்கும் வழி காட்டினார்.

அதை, அன்றைய அனைத்திந்திய கல்வி அமைச்சர், பேராசிரியர் உமாயூன்கபீர், தமது தனிக் கடிதத்தின் வாயிலாக, எல்லா அரசுகளுக்கும் பரிந்துரைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/174&oldid=623070" இலிருந்து மீள்விக்கப்பட்டது