பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 சுந்தரவடிவேலு : ”

தயவு செய்து அவனுக்குப் பதில் யாரையாவது போட்டு விடுங்கள், என்று என்னிடம் வேண்டினார்கள்.

வெங்கடாசலபதியின் தந்தை திரு சின்னப்ப செட்டியார், மூத்த பள்ளி ஆய்வாளர். ஆகவே, உரிமையோடு அவரிடம் பேசினேன்.

‘'நான் பதினைந்து நாள்களும் மேட்டுரில் தங்கப்போகிறேன் மாணவர்கள் என் பார்வையில்தான் இருப்பார்கள். எனவே, அஞ்சத் தேவையில்லை.

‘மேலும் என் மனைவியும் மேட்டுரில் என்னுடன் இருப்பார். அவரும் அப் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வார். எவருக்கும் ஏதும் நெரிடாதபடி பாதுகாத்துக் கொண்டுவந்து விடுகிறேன் என்று உறுதி கூறினேன்.

என் மனைவியை அழைத்து நடந்ததைக் கூறினேன். அவரும் வாக்குக் கொடுத்தார். அப்புறம் ஒருவாறு ஆறுதல் பெற்றுச் சென்றார்கள்.

அடுத்த நாள் இண்டர்மீடியட் வகுப்பு மாணவரான வெங்கடா கலபதியை அழைத்துவந்து, என் மனைவிக்கு அறிமுகம் செய்தனர்.

. கருத்தரங்கம் நடந்தது; இரண்டு நாள்வரை வெங்கடாசலபதி இருந்த (டைம் தெரியவில்லை.

அப்புறம் அவருடைய ஆளுமை வெளிப்பட்டது; பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார்.

கலகலப்பாகப் பழகினார்; எல்லோர் பாராட்டையும் பெற்றார். அதைப்போல, பல மாணாக்கர் போற்றத்தக்க தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

வகுப்பறைகளில் முடங்கி இருந்தபோது வெளிப்படாத ஆற்றல்கள், வளர்ச்சிக்குத் துணையான ஆற்றல்கள் வெளிப்பட்டன.

‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாரதி

. - - ---

பாடினார்.

‘எத்தனை கோடி ஆற்றல் வைத்தாய்’ என்று பாடினாலும் பொருந்தும் என்பதை அப்போது உணர்ந்தேன். கல்வி நிலையங்கள் பவகை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்னும் தெளிவைப் பெறிறேன். * *

வெங்கடாசலபதி பின்னர், கிண்டி பொறியியல் கல்லூரியில் பசllதார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/185&oldid=623082" இலிருந்து மீள்விக்கப்பட்டது