பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரவ டிவேலு 2O3 . ”

என்னைப் பற்றித் தெரிந்து கொண்டவர். 1940 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள் நடந்த என் திருமணத்தைப் பாராட்டி ‘குடி அாசு தலையங்கம் தீட்டியிருந்தது. அதைப் படித்ததால், என்னிடம் பற்றுக் கொண்டிருந்த அவர், தமது பங்களாவை எனக்குக் கொடுக்க முன் வந்தார்.

ஆனால், ஒரே ஒரு நிபந்தனை வாடகைப் பேச்சு எழக்கூடாது.

வாடகை கொடுக்காமல் தங்கத் தயங்கினேன்.

‘'ஆறுமுகனார் எந்தவிதப் பரிந்துரைக்கும் உங்களிடம் வரமாட்டார். அந்த வீட்டுக்கு அதிகம் கொடுப்பதனாலும் அய்ம்பது அறுபது பாய்க்குமேல் போகாது. அத் தொகை கிடைக்காமல் போவது, அவருக்குப் பெரிய இழப்பல்ல. தயங்காமல் அவ் வீட்டிற்குக் குடியேறுங்கள். அங்கிருந்தபடியே வீடு தேடுவோம் என்றார் பொன்னம்பலனார்.

வேறு வழியின்றி, ஆறுமுக நாடார் பங்களாவிற்குச் சென்று _ங்கினோம். அதைச் சுற்றி ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள் பல மருந்தன. பாரதியாரின் காணி நிலம் வேண்டும்’ என்னும் பாட்டை _wது நினைவுபடுத்தியது.

காவலுக்கு ஒரு காவற்காரர் இருந்தார். அவர் தோட்ட மூலையில், குடும்பத்தோடு குடியிருந்தார். எனவே, அக்கம் பக்கத்தில், கூப்பிடு தொலைவில் வீடுகள் இல்லாத நிலையிலும் அச்சமின்றிக் குடியிருந்தோம்.

சில வாரங்களில், சின்னச் சொக்கி குளத்தில், திரு. கோபால விருஷ்ணன் கோனார் என்ற புத்தக வணிகரின் வீட்டிற்கு அருகில் சிறிய பங்களா கிடைத்தது. அங்குக் குடிபெயர்ந்தோம்.

கிட்டத்தட்ட ஈராண்டு அங்கேயே தங்கினோம். வாடகை முப்பத்தைந்து ரூபாய்களே. இப்போது அந்த வாடகைக்குக் குடிசை கடைப்பதே அரிது. .

ப_பிள்யு.பி. ஏ. செளந்தரபாண்டியன்

மதுரை மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளிகள் அதிகம்; ஆகவே, _மரிக்கை வேலை அதிகம்.

அதை விடத் தொல்லையானது என்ன தெரியுமா? பள்ளிகளை _தி தியவர்கள் பெரிய செல்வர்கள். ஆகவே செல்வாக்கு உடைய

பமைப்புகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/219&oldid=623119" இலிருந்து மீள்விக்கப்பட்டது