பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நை து சுந்தரவடிவேலு 209

விபரீத சிந்தனை

‘'நான் செங்கற்பட்டு மாவட்ட ஆட்சிக் குழுவின் செயலாளனாகப் பணியாற்றி உள்ளேன். பல்லாண்டு அக் குழு உறுப்பினராக இருந்த _ங்கள் மாமா சுந்தர சேகரன் நன்றாகத் தெரியும்.

‘அந்த உரிமை பற்றி உங்களோடு மனந்திறந்து பேச வந்துள்ளேன். ‘கல்வி அலுவலர் என்ற முறையில் உங்கள் காலத்தில் நிறைய _யர்நிலைப் பள்ளிகள் ஏற்படுத்த முயல்வதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

‘அப்படி ஏற்பட்டால், சுற்றியுள்ள ஏழைகள், சமுதாயத்தில் பழானவர்கள் எளிதாகப் படித்துவிடுவார்கள்.

‘அப்புறம் நமக்கு மரியாதை மிகக் குறைந்துவிடும். அப்படிப் படித்தவர்கள் நம்மோடு சமத்துவம் கொண்டாடுவார்கள்.

‘உயர்நிலைப் பள்ளிகள் ஏராளமாக ஏற்படுவது, சமுதாய ஏணியின் பவல்தட்டுகளில் உள்ள நமக்கு நல்லதல்ல.

“இதை மாவட்ட ஆட்சியாளரிடம் விளக்கினேன்; எனவே, புதிய _யாநிலைப் பள்ளிகள் திறக்க மனு அனுப்பவேண்டாமென்றேன். அவர் அதை ஒப்புக் கொண்டார்.

‘நீங்கள், நமக்கு வேண்டிய குடும்பத்துப் பிள்ளையாயிற்றே! நீங்கள் வருந்தக் கூடாதே என்பதற்காகச் சொல்ல வந்தேன்’ என்று ப_படப்பே இல்லாமல், திரு தாயப் பிள்ளை கூறினார்.

அவர் பார்ப்பனரல்லாதவர் என்பதைச் சொல்லி வேலை பெற்றவர்; அலுவலில் பதவி உயர்வுகள் பெற்றவர்.

அவர் இப்படிச் சொல்கிறாரே என்று அப்போது அதிர்ச்சி அடைந்தேன்.

பிற்காலத்தில், அவர் தனி மரம் அல்ல; பெருந்தோப்பின் ஒரு மரம் _பது எனக்குத் தெரிந்தது.

மாவட்ட ஆட்சியாளரை அணுகி, நெருக்கி, புதிய உயர்நிலைப் பள்ளிகளைப் பெறும் அளவு, ஆர்வம் உடையவர்கள் இல்லை. ாாவ, என் முயற்சி சிதைந்துவிட்டது.

டாக்டர் செல்லப்பா-மெர்சி செல்லப்பா

மதுரையில் நான் இருமுறை நோய்வாய்ப்பட்டேன்.

ஒரு நாள் மாலை, பெரியகுளத்தில் அலுவலர்கள் மன்றத்தில் அமlது. அன்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/225&oldid=623126" இலிருந்து மீள்விக்கப்பட்டது