பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 நினைவு அலைகள்

நான் உத்தமபாளையம் பக்கம் செல்லும் போதெல்லாம் என்வைக் காண்பார்; நிகழ்ச்சிகள் சிலவற்றிற்கு ஏற்பாடு செய்வார்.

தேவாரம் என்பது ஒர் ஜமீன் பேரூர். வழிவழி வந்த ஜமீந்தார். கணக்கின்றிக் கடன் வாங்கியதால் ஜமீன் மூழ்கிவிட்டது. ஜt.i தனவணிகர் கைக்குப் போய்விட்டது.

வணிகர் அவ்வூருக்குச் சென்று தங்கி, குடிமக்களின் நல்லலெண்வைதி, தையும் ஒத்துழைப்பையும் பெற முயன்று கொண்டிருந்தார். அவ்வமயம், நான் உத்தமபாளையம் செல்ல நேரிட்டது. நாராயணசாமி பாரதியார் என்னைத் தேவாரத்திற்கு அழைத்துச் சென்றார். வணிகரிடம் நேரம் கேட்டுப் பேட்டிக்கு அழைத்துப் போனார்.

நான், புதிய ஜமீந்தாரிடம் தேவாரம் போன்ற பெரிய ஊருக்கு து உயர்நிலைப்பள்ளி தேவை; ஆனால் நடுநிலைப் பள்ளியே இருக்கிறது

‘ஜமீந்தார் விரும்பினால் ஒர் உயர்நிலைப் பள்ளி நடத்த இசைவு பெற்றுத் தருகிறேன்.

‘அப்படி நடத்துவதன் வாயிலாக, ஊரார் நல்லெண்ணத்தைப் பெறலாம்’ எனச் சொல்லிப் பார்த்தேன்.

ஒரு மணி நேரம் செலவிட்டும், கிடைத்த பலன் நல்ல சிற்றுண்டியும், காப்பியும் மட்டுமே. வணிகர் சிறிதும் பிடி கொடுக்கவில்லை.

வணிகரிடம் பலிக்காத என் நாவன்மை உழவர்களிடம் பலித்தது.

கட்டை வண்டிப் பயணம்

பெரியகுளம் வட்டத்தில் வெங்கடாசலபுரம் என்றோர் ஊர் உள்ளது அக் காலத்தில் அவ்வூருக்கு வண்டிப்பாதை கூடக் கிடையாது; ஆனா. இருபது ஆண்டுகளாகப் பேருந்து போகும் சாலை அமைந்துள்ளது அரசியல் விடுதலையின் பலன் இது.

அவ்வூரில் ஊரார் நிர்வாகத்தில் ஓர் உயர் தொடக்கப் பள்ளி நடந்து வந்தது. அது கம்மவார் நாயுடுகள் நிறைந்த ஊர்.

அக் காலத்தில் காங்கிரசிற்கு ஆதரவான ஊர். எனவே, விடுத.ை போராட்ட தியாகியான நாராயணசாமி பாரதிக்கு வேண்டிய ஊர்.

உயர் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு அவர் என்னைய என் மனைவியையும் அழைத்துச் சென்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/230&oldid=623132" இலிருந்து மீள்விக்கப்பட்டது