பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ, து. சுந்தரவடிவேலு 217

‘'காப்புப் பணத்தைப் பொறுத்தமட்டில், இரண்டு திங்கள் தவணை பகட்போம்; விளைச்சல் அறுவடையானதும் அதை விற்றுக் _டிவிடுவோம்’ என்றதோடு, எவரெவர் எவ்வளவு நன்கொடை கொடுப்பது என்பதையும் உறுதி செய்து கொண்டிருந்தோம்.

‘ஆண்கள் பேசும்போது, எட்டி நின்று மூத்த தாய்மார்கள் கேட்டுக் _ொண்டிருந்தார்கள். நாங்கள் கலைவதற்கு முன், அவர்கள் குறுக்கிட்டார்கள். -

‘வலிய வந்த சீதேவியை விட்டுவிடக் கூடாதென்றார்கள். அவர்களை ஆண்டு விழாவுக்கு அழைத்தபோது, உயர்நிலைப் பள்ளியைப்பற்றி நாம் கனவு கூடக் காணவில்லை.

வரதராசப் பெருமாளும் சீதேவியும் வந்துவரம் கொடுத்ததுபோல், துண்டு பேருமே உயர்நிலைப்பள்ளி வைத்து நடத்தச் சொன்னார்கள். அந்த நல்ல வாக்கை நழுவவிடக்கூடாது.

‘குடியானவர்களுக்குப் பணம் எப்போதே ஒருமுறைதான் வரும். அதுவரை, நடத்தவேண்டிய செயலைத் தள்ளிப்போட்டால் மனம் மாறிப்போகலாம்; காரியம் கைகூடாமற்போகலாம்.

‘பணம் கட்டத் தவணை கேட்காதீர்கள். கண்டபடி செலவு செய்யக் _ள் வாங்குவதானால் தலைகுனியணும். நல்லதற்கு அவசரத்திற்குக் _ன் வாங்குவதில் தப்பு இல்லை.

‘எங்கள் மூன்று வீடுகளில் இருந்து, போதிய நகைகளைக் கொண்டு போங்கள். பெரியகுளம் அடகுக்கடையில் வைத்து முப்பத்தய்யாயிரத்தை வாங்கிக் கொண்டுபோய், வங்கியில் கட்டி விட்டு வாருங்கள்: தானியம் விளைந்ததும் நகைகளை மீட்டுக் கொள்ளலாம் என்று சொன்னார்கள்.

‘அப்படியே, மூன்று வீட்டு நகைகளை வைத்து, பணத்தை வாங்கிக் கொண்டு வந்துள்ளோம். வங்கியில் கட்டுவதற்கான படிவங்களை, _ங்கள் கைகளால் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டுமென்று பவண்டிக்கொள்ளவே, இங்கு வந்துள்ளோம்’ என்றார்கள்.

அவர்கள் விரும்பியபடி, ஆவன செய்தேன். உரிய தொகையைக் _டிவிட்டு உயர்நிலைப் பள்ளி கோரும் மனுவில் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். நான் மட்டற்ற மகிழ்ச்சியில் |ளைத்தேன்.

காப்பு ஏற்படவில்லை

அதைக் கலைப்பற்கு ஒரு நிகழ்ச்சி, வெங்கடாசலபுரத்திற்கு அருகில் பwங்காபுரம் என்று ஒர் ஊர் இருக்கிறது. இரு ஊர்க்காரர்களும் நெருக்கமான உறவினர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/233&oldid=623135" இலிருந்து மீள்விக்கப்பட்டது