பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 நினைவு அலைகள்

பட்டிவீரன்பட்டி போன்ற பெரிய ஊரில், செல்வம் செழிக்கும் அவ்வூரில், ஒர் உயர்நிலைப் பள்ளி தேவை என்று சொல்லி ஆசையை ஊட்டினார்.

குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு, உயர்நிலைப் பள்ளியை வாங்கித் தந்தால், மகிழ்ச்சியாகவும் செம்மையாகவும் நடத்துவோமென்று உறுதி கூறினார்கள்.

‘உங்கள் நிதி நிலைமையைப் புரிந்து கொள்ள, உங்கள் குழுவின் கணக்கைப் பார்க்கலாமா’ என்று கேட்டார்.

கணக்கை அவர் முன் வைத்தார்கள். அப் பள்ளி, உயர்தொடக்கப் பள்ளியாக உயர்த்தப்பட்ட ஆண்டிற்கு முந்தைய ஆண்டிலிருந்து தொடங்கிப் பார்த்தார்.

உயர்தொடக்கப் பள்ளி வாங்கச் செலவு 550 ரூபா என்று, ஒரு பதிவைக் கண்டார். அதன் விவரத்தைக் கேட்டார்.

அத் தொகையை, அப்பகுதி தொடக்கப் பள்ளி ஆய்வாளரிடம் சேர்ப்பித்ததாக உறுப்பினர் ஒருவர் கூறினார். எதற்காக என்று சார நாயர் கேட்டார்.

‘சில முறையாவது மதுரைக்குச் சென்று, கோப்புகளை நகர்த்திவிட்டால்தான் உரிய காலத்தில் ஆனைவரும் என்று ஆய்வாளர் கூறினார். போய் வரும் செலவிற்கு மொத்தமாகக் கொடுத்தோம் என்பது குழுவின் பதில். *

‘பலமுறை மதுரை போய் வரும் செலவே அவ்வளவு ஆகாதே! அதைச் சாக்காகக்காட்டி, வேறெவராவது எடுத்துக்கொண்டிருப் பார்களா?’ என்று நாயர் கேட்டார்.

‘அப்படி நடக்கவில்லை; மொத்தத் தொகையும் இப்பகுதி ஆய்வாளரிடம் கொடுக்கப்பட்டதே உண்மை’ என்று குழு உறுப்பினர் ஒருவர் கூறினார்.

‘மாவட்டக் கல்வி அலுவலர் பதவி காலியாயிருந்தது. எனவே, அவருக்குப் பங்கு என்ற பேச்சிற்கு இடமில்லை.

“நாங்கள் கொடுத்தது அக்கால வட்டார ஆய்வாளரிடமே. மண்டல ஆய்வாளரை நாங்கள் காணவே இல்லை. அப்போதிருந்த நிர்வாகக் குழு உறுப்பினர் எவரும் இப்போது இல்லை. எனவே, எவரிடம் சேர்ந்தது என்பது எங்களுக்குத் தெரியாது’ என்று பதில் வந்தது.

‘அப்படியானால், வட்டார ஆய்வாளருக்கு 50 ரூபாயும், மண் . ஆய்வாளருக்கு 500 ரூபாயும் கொடுக்க, அந்தத் தொ.ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/252&oldid=623156" இலிருந்து மீள்விக்கப்பட்டது