பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 நினைவு அலைகள்

‘'நான் இந்தி கட்டாய பாடத்தை விரும்பாதவர் என்பது உங்களுக்குத் தெரிந்தது தானே, இன்னும் ஒன்றரை ஆண்டே பணியில் இருக்க வேண்டிய நானே எதிர்க்கவில்லை. என்னைப் பார்த்தாவது. நீங்கள் பட்டும் படாமலும் பேசியிருக்கலாம்.

‘இளங்கன்று பயமறியாது என்பதைப்போல். பேசிவிட் , திட்டவட்டமாகக் கருத்துரைத்தீர்; அது அமைச்சர் ஆணைக்கு மாறாக உள்ளது. அவர் பகை கொண்டால்; தொலைத்து விடுவாரே “ என்று என்பால் உள்ள பரிவினால் இடித்துரைத்தார், சாம்பசிவம்.

அப்போதும் அச்சம் ஏற்படவில்லை; திரு. சாம்பசிவம் பிள்ளை வட்டார ஆய்வாளராக இருந்தபோது, நான் அவரிடம் இளந்துணை ஆய்வாளராக வேலை பார்த்தவன். அவர் குணசீலர்.

அத்தகையோர்கூட, உள்ளத்தில் உணர்ந்ததைச் சொல்ல முடியாத சூழல் சமுதாயத்திற்குக் கேடானது.

இவ்வெண்ணம் என்னுள் மின்னுகையில், மற்றொன்றும் மின்வ. எனக்கு ஆறுதல் தந்தது.

சேலம் நாச்சியப்பர் என்னைப் பற்றி, எனக்கு அறியாம வே. அமைச்சர் அவினாசிலிங்கனாருக்கு எழுதி விட்டதைப்பற்றி நாங் துடித்தபோது, அவர் அஞ்சவேண்டாம் எந்த ஆண்டிக்கு எந்த ம . சொந்தம் என்று சொல்லி என்னைத் தேற்றியது பளிச்சிட்டது.

நொடியில், உண்மையைப் பேசியதற்காகத் தொல்லை வந்தா. வரட்டும்; வாழ்க்கை முழுவதும் இரத்தினக் கம்பளத்திலேயே நடக்கமுடியுமா? என்று திடப்படுத்திக்கொண்டேன்.

திரு. சாம்பசிவம் பிள்ளையின் மனம் புண்படக்கூடாதே என்பதற்காக

‘எனக்கு உலகம் புரிய நாளாகிறது’ என்று கூறிவிட்டு, அந்தப் பேச்சை அத்துடன் முடித்தேன்.

எங்கள் மாநாட்டு ஆலோசனைகள் மெய்யாகவே வெட்டி பேச்சாயின.

இரட்டைத் தாழ்ப்பாள்

1938 இல் இராசாசி, இந்தி மொழியைக் கட்டாயமாக்கியபோது

முதல் படிவத்திலிருந்து புகுத்தினார்.

தொடக்கத்தில் சில உயர்நிலைப் பள்ளிகளில் பரப்புதல் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/260&oldid=623165" இலிருந்து மீள்விக்கப்பட்டது